44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் 170 நாடுகளிலிருந்து பல்வேறு வீரர் வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். விறுவிறுப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் இறுதி கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


 


இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்கள், விருந்தினர்களுக்கும் கீழடி தொல்லியல் ஆய்வு, திருக்குறள் ஆகியவற்றின் ஆங்கில, பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழியாக்க நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 






செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் இன்று வெற்றி அடைந்தது. இந்திய மகளிர் ஏ அணி கஜகஸ்தான் அணியை 3.5- 0.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்திய மகளிர் பி அணி நெதர்லாந்து அணியையும் மற்றும் இந்திய மகளிர் சி அணி ஸ்வீடன் அணியை வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் இதுவரை பதக்கமே வாங்காமல் இருந்த இந்திய மகளிர் அணி நாளை தங்க பதக்கத்தை வெல்ல வாய்ப்புள்ளது. புள்ளி பட்டியலில் இந்திய A மகளிர் அணி முதல் இடத்தில்  உள்ளனர் என்பது குறிப்புடத்தக்கது . 


 10வது ரவுண்ட் முடிவுகள்


இந்தியா B - உஸ்பெகிஸ்தான்


 குகேஷ் டி -- வெற்றி 
 சரின் நிஹால் --  சமன் 
 பிரக்ஞானந்தா ஆர்  -- வெற்றி 
 அதிபன் பி --  சமம் 


  இந்தியா  A


 ஹரிகிருஷ்ணா -- தோல்வி 
  விதித் சந்தோஷ் குஜராத்தி -- வெற்றி 
 எரிகைசி அர்ஜுன் -- சமன் 
 நாராயணன் எஸ்.எல் -- வெற்றி 



இந்தியா 3 - ஸ்லோவாக்கியா



 கங்குலி சூர்யா சேகர்  -- சமன் 
 சேதுராமன் எஸ்.பி -- தோல்வி 
 கார்த்திகேயன் முரளி -- சமன் 
 பூரணிக் அபிமன்யு  -- வெற்றி 


தற்போது 10வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் அணியுடன் இந்திய பி அணி மோதியது. இதில் குகேஷ், நோடிர்பெக் என்ற வீரருடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குகேஷ், 72வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். இதே போன்று நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா சிண்டாரோவ் என்ற வீரருடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 77வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றியை பெற்றார். இதே போன்று மற்ற 2 வீரர்களான நிஹல் மற்றும் அந்திபன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் இரு அணிகளும் தலா 2 புள்ளிகளை பெற்று சமனில் முடிந்தது. இதே போன்று ஈரான் அணியுடன் இந்தியா ஏ மோதியது. இதில் இரண்டு அணிகளும் தலா 2 புள்ளிகளை பெற்று சமனில் முடிவடைந்தது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண