கஜகஸ்தான் நாட்டில் ஆசிய உள்விளையாட்டு சாம்பின்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் நடப்பு தேசிய சாதனை படைத்த தஜீந்தர்பால் சிங் தூர் கலந்து கொண்டார். 


போட்டியின் முதல் முயற்சியில் சொதப்பிய தஜீந்தர்பால் சிங் தூர், 3வது மற்றும் 5வது முயற்சியில் 19.49 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கம் பதக்கத்தை தட்டி சென்றார். சாம்பியன்ஷிப் போட்டிகளில் தஜீர்ந்தர்பால் வென்ற முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 






இதேபோட்டியில் கலந்துகொண்ட மற்றொரு வீரரான  கரண் சிங் 19 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். வருக்கு அடுத்தபடியாக, கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த இவான் இவனோவ் 18,10 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து 3 வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். 






வெள்ளி வென்ற தமிழ்நாடு வீரர்:


தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்திரவேல் பங்கேற்றார். இவர் ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். பிரவீன் இந்த போட்டியில் 16.98 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை நேற்று கைப்பற்றினார்.






இந்திய அளவில் பிரவீன் சித்திரவேல் தாண்டியுள்ள 16.98 மீட்டர் தேசிய அளவில் ட்ரிபிள் ஜம்ப் நீளம் தாண்டுதலில் புதிய சாதனை ஆகும், வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் சித்திரவேலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.