ஆசிய விளையாட்டுப் போட்டியின் முடிவில் பதக்கப் பட்டியலில் கோலோச்சுவது யார் என்பது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஆசிய விளையாட்டுப் போட்டி:

ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக, ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி, அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் நாள் முடிவில் அதிகப்படியான பதக்கங்களை வென்று, சீனா பதக்கப்பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 

பதக்கப்பட்டியல்:

வேறு எந்த அணியும் நெருங்க முடியாத அளவிற்கு சீனா தற்போது வரை 20 தங்களை வென்றுள்ளது. அதோடு, 7 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைதொடர்ந்து, 5 தங்கள் உட்பட 14 பதக்கங்களுடன் கொரியா இரண்டாவது இடத்திலும், 2 தங்கம் உள்ளிட்ட 14 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் நீடிக்கின்றன.

நாடுகள்   தங்கம்   வெள்ளி   வெண்கலம்   மொத்தம்
சீனா 20 7 3 30
தென் கொரியா 5 4 5 14
ஜப்பான் 2 7 5 14
ஹாங் காங் (சீனா) 2 0 5 7
உஸ்பெகிஸ்தான் 1 3 3 7
இந்தியா 1 3 3 7
தைவான் 1 1 2 4
இந்தோனேஷியா 0 1 3 4
மங்கோலியா 0 1 2 3
ஈரான் 0 1 1 2

தங்கம் வென்ற இந்தியா

இந்தியா முதல் நாள் முடிவில் 3 வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது. இந்நிலையில், இரண்டாவது நாள் தொடக்கத்தில் இந்தியா தனது முதல் தங்கத்தை கைப்பற்றியது.

  • 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 1893.7 மதிப்பெண்களுடன் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர், ருத்ரன்காஷ் பாட்டீல் ஆகியோர் தங்கம் வென்று உலக, ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாதனைகளை முறியடித்தனர்.
  • 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 4 இறுதி ஏ பிரிவில்,  இந்தியாவின் ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் அடங்கி அணி வெண்கலம் வென்றனர். இது இந்திய அணி வென்ற 7வது பதக்கமாகும்.

போட்டிகள் என்ன?

ஏற்கனவே தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று முதல் பதக்கங்களுக்கான சுற்றுகள் தொடங்கின. அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 40 விளையாட்டுகளில் 481 பந்தயங்கள் நடைபெற உள்ளன. அதில், கிரிக்கெட், வாள்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே, தேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை சார்ந்த போட்டிகள் அடங்கும்.

தொடங்கிய பதக்க வேட்டை:

இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர் விராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் முதல் நாளான இன்று துடுப்பு படகு போட்டி, வாள் வீச்சு, நீச்சல் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்பார்த்ததை போன்று சீன வீரர்கள் தங்கப் பதக்கங்களை வெல்வதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேநேரம், இந்தியாவும் பதக்கங்களை வென்று வருகிறது.