2023 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 33 பதக்கங்களை வென்றுள்ளது.
அதன்படி, 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்கள் என 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து, பதக்கப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
பதக்க அட்டவணை:
சீனா - 200 பதக்கங்கள் (105 தங்கம், 63 வெண்கலம், 32 வெண்கலம்)
ஜப்பான் - 99 பதக்கங்கள் (27 தங்கம், 35 வெண்கலம், 37 வெண்கலம்)
தென் கொரியா - 102 பதக்கங்கள் (26 தங்கம், 28 வெண்கலம், 48 வெண்கலம்)
இந்தியா - 33 பதக்கங்கள் (12 தங்கம், 13 வெண்கலம், 33 வெண்கலம்)
இந்தியா எந்தெந்த போட்டிகளில் பதக்கங்களை வென்றது..?
துப்பாக்கி சுடுதல் | 6 | 7 | 5 | 18 |
படகோட்டுதல் | 0 | 2 | 3 | 5 |
கிரிக்கெட் | 1 | 0 | 0 | 1 |
படகோட்டம் | 0 | 1 | 2 | 3 |
குதிரையேற்றம் | 1 | 0 | 1 | 2 |
வுஷூ | 0 | 1 | 0 | 1 |
டென்னிஸ் | 0 | 1 | 0 | 1 |
ஸ்குவாஷ் | 0 | 0 | 1 | 1 |
தடகளம் | 0 | 0 | 1 | 1 |
ஆசிய விளையாட்டு 2023 பதக்க அட்டவணை
1 | சீனா | 105 | 63 | 32 | 200 |
2 | ஜப்பான் | 27 | 35 | 37 | 99 |
3 | தென் கொரியா | 26 | 28 | 48 | 102 |
4 | இந்தியா | 8 | 12 | 13 | 33 |
5 | தாய்லாந்து | 8 | 3 | 9 | 20 |
6 | உஸ்பெகிஸ்தான் | 7 | 10 | 15 | 32 |
7 | ஹாங்காங் சீனா | 5 | 13 | 18 | 36 |
8 | சீன தைபே | 5 | 6 | 9 | 20 |
9 | ஈரான் | 3 | 10 | 10 | 23 |
10 | கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு | 3 | 6 | 4 | 13 |
நேற்றைய நாளின் டாப் மொமெண்ட்ஸ்:
துப்பாக்கிச் சூடு நிகழ்வுகளில் நேற்றும் இந்தியா சிறப்பாகவே செயல்பட்டது, முதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் அணி போட்டியில், இந்தியாவின் இஷா சிங், பாலக், திவ்யா ஆகிய மூவரும் இணைந்து 1731-50x என்ற புள்ளிக்கணக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் ஆடவர் குழு பிரிவில் ஐஸ்வர்யா பிரதாப் சிங், ஸ்வப்னில், அகில் ஆகிய மூவரும் தங்கப் பதக்கம் வென்றனர்.
இதன்மூலம், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தனது மூன்றாவது மற்றும் நான்காவது பதக்கங்களை வென்றது. இதில் பாலக் 242.1 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இஷா சிங் 239.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஐஸ்வர்யா பிரதாப் சிங் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் ஆடவர் பிரிவில் 460.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகேத் மைனேனி மற்றும் ராஜ்குமார் ராமநாதன் ஜோடி சீன தைபே ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
ஸ்குவாஷ் மகளிர் குழு போட்டியில் , இந்திய அணி ஹாங்காங் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்தியாவின் கிரண் பாலியன் குண்டு எறிதலில் 17.36 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். 72 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கான குண்டு எறிதலில் நாட்டிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இதற்கு முன், 1951ல் நடந்த முதல் டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டியில், பார்பரா வெப்ஸ்டர் வெண்கலம் வென்றிருந்தார். இந்த போட்டியில் சீனாவின் லிஜியோ கேங் 19.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த ஜியாயுவான் 18.92 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.