சென்னையில் நடைபெற்று வரும் ஆசியன் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் தென் கொரியா அணி வெற்றிப்பெற்றது. 


இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சென்னையில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் தென்கொரியா- ஜப்பான் அணிகள் மாலை 4.00 மணிக்கு தொடங்கியது.


தென் கொரிய அணிக்கு எதிரான போட்டியின் 5வது நிமிடத்திலேயே ஜப்பான் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதன்பிறகு 2வது காலிறுதியில் தென்கொரிய வீரர் சியோலியன் பார்க் கோல் அடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. 






தொடர்ந்து, மூன்றாவது காலிறுதி நேரங்களில் நடப்பு சாம்பியனான தென் கொரிய அணி அடுத்த கோல் அடித்து முன்னிலை பெற்று வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் , ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி அசத்தியது. தென் கொரிய அணிக்காக பார்க் சியோலியோன் மற்றும் கிம் ஜுங்ஹூ ஆகியோர் கோல்களை அடித்தனர். இது ஜப்பானுக்கு எதிரான 21 போட்டிகளில் 17வது வெற்றியாகும்.


இரு அணிகள் வீரர்கள் விவரம்: 


தென் கொரியா: ஜேஹியோன் கிம், மன்ஜே ஜங், டெய்ன் சன், ஜங்ஜுன் லீ, சியோன் வூ ஜி, சியோலியோன் பார்க், ஹைஸுங் லீ, சுங்யுன் கிம், சியூன்ஹூன் லீ, ஹியோங்ஜின் கிம், ஜோங்யுன் ஜாங்.


ஜப்பான்: தகாஷி யோஷிகாவா, ஷோடா யமடா, யமடோ கவாஹாரா, செரன் டனகா, கென்டாரோ ஃபுகுடா, டைகி தகடே, யூமா நாகாய், ரைக்கி புஜிஷிமா, மசாகி ஓஹாஷி, ஜென்கி மிதானி, கோசி கவாபே