ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுபச்சலசாய் தேசிய மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கி நேற்று அதாவது 16ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கலப்பதங்களை வென்று பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தினைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் ஜப்பான் முதல் இடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. 


ஆசிய அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு திருவிழாக்களில் முதன்மையானது ஆசிய தடகளப் போட்டிதான். ஆசிய கண்டத்தில் உள்ள் அதிகப்படியான நாடுகள் பங்கேற்கும் என்பதால் இந்த தொடருக்கு விளையாட்டுத்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. 


இப்படியான இந்த விளையாட்டுத்திருவிழா இந்த அண்டு தாய்லாந்து நாட்டில் நடத்தப்பட்டது. இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மொத்தம் 19 நாடுகள் களமிறங்கிய இந்த தொடரில் முதல்நாளில் இருந்தே அனைத்து நாடுகளும் பரபரப்பாக விளையாடத்தொடங்கின. 


இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்கள் குறித்து இந்த படத்தில் காணலாம். குறிப்பாக மகளிருக்கான ஹர்ட்லிங் போட்டியில் ஜோதி யர்ஜி தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான டிப்பிள் ஜம்ப் போட்டியில் அப்துல்லா அபுபக்கர் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோல் மகளிருக்கான ஸ்டிப்பிள்ஷேஷ் போட்டியில் பருல் சவுத்திரி தங்கம் வென்றார். அதேபோல் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய் குமார் சரோஜ் தங்கப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தெர்பல் சிங் துர் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் கலப்பு 4*400 மீட்டர் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத்தந்தனர். இதனால் இந்திய அணி 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 




இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஓவ்வொரு நாடும் பதங்களை வென்று பதக்கப்பட்டியலில் பெற்ற இடத்தை இந்த படத்தில் காணலாம், 





ஜப்பான், 16 தங்க பதக்கங்களையும், 11 வெள்ளி பதக்கங்களையும், 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. ஜப்பான் நாடு மொத்தம் 37 பதங்களை வென்றுள்ளது. அதேபோல் பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த சீனா 8 தங்கம் 8 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா மொத்தம் 22 பதக்கங்களை தன்வசமாக்கியுள்ளது.


அதேபோல் மூன்றாவது இடம் பிடித்துள்ள இந்திய அணி 6 தங்கப் பதக்கங்களும், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கலப்பதங்களை வென்றுள்ளது. அதேபோல் பதக்கப்படியலில் கடைசி இடத்தில் உள்ள நாடுகள் என்றால் அது மங்கோலியா, மலேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.