ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுபச்சலசாய் தேசிய மைதானத்தில் நடந்து வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழா ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி நிறைவடைகிறது. ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் 2023இல் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட தஜிந்தர்பால் சிங் தூர் 20.23 மீட்டர்கள் வீசி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  
 
இந்தியாவின் 28 வயதான ஷாட் புட் (குண்டு எறிதல்) வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் இன்று அதாவது ஜூலை 14ஆம் தேதி ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023ல் ஆண்களுக்கான ஷாட் புட் போட்டியில் 20.23 மீட்டர்கள் எறிந்து முதலிடம் பிடித்தார். அவர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019 இல் 20.22 மீட்டர் எறிந்து தங்கம் வென்றார். 2017ஆம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல், 3000 மீட்டர் ஸ்டெப்சேஷ் போட்டியில் இந்திய அணியின் பாருல் சவுத்ரி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 
பாங்காக்கில் நடந்துவரும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளில், தஜிந்தர் டூர் தனது ஷாட் புட் பட்டத்தை தக்கவைத்து ஆசிய சுற்றுகளில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறார்.  குண்டை வீசி எறிந்த பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டதால், முடிவுகள் வெளியிடப்படும் வரை அவரால் அங்கு இருக்க முடியாது எனும் அளவிற்கு காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால், அவர் உடனே மருத்துவமனைக்கு விரைந்தார். அவரது உடல் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.  ஸ்டீப்பிள்சேசர் போட்டியில் இந்திய அணியின் பாருல் சவுத்ரி தங்கப் பதக்கத்தை வென்றார். அதேபோல் ஷைலி சிங் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் 6.54 மீ பாய்ந்து தங்கப் பதக்கம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இறுதியில் அவருக்குப் பின்னர் நீளம் தாண்ட வந்த  வெள்ளிப் பதக்கம் தான் கிடைத்தது. 
 
2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இதுவரை பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்:
 
நாள் 1
அபிஷேக் பால் (10,000 மீ. வெண்கலம்)
 
நாள் 2
ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம் தங்கம்),  அஜய் குமார் சரோஜ் (1500மீ தங்கம்),  அப்துல்லா அபூபக்கர் (டிரிபிள் ஜம்ப் தங்கம்),  ஐஸ்வர்யா மிஸ்ரா (400 மீ. வெண்கலம்),  தேஜஸ்வின் சங்கர் (டெகாத்லான் வெண்கலம்).
 
நாள் 3
தஜிந்தர் தூர் (ஷாட் புட் தங்கம்),  பருல் சவுத்ரி (3000மீ ஸ்டீபிள் சேஸ் தங்கம்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல் வெள்ளி). 

 
தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஜப்பான் 7 8 3 18
2 சீனா 3 3 1 7
3 இந்தியா 3 0 3 6
4 கஜகஸ்தான் 1 2 0 3
5 தாய்லாந்து 1 1 1 3
6 இலங்கை 1 0 2 3
7 உஸ்பெகிஸ்தான் 0 2 1 3
8 கொரியா 0 0 2 2
9 வியட்நாம் 0 0 1 1
9 சவூதி அரேபியா 0 0 1 1
9 மங்கோலியா 0 0 1 1