Asian Athletics Championships 2023: ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் 2023இல் மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டெபிள் சேஸ்  போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட பாருல் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது இந்தியாவுக்காக அவர் வெல்லும் 5வது தங்கம் ஆகும். 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுபச்சலசாய் தேசிய மைதானத்தில் நடந்து வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழா ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் மூன்றாவது நாளான இன்று அதாவது ஜீலை 14ஆம் தேதி, நடைபெற்ற மகளிருக்கான ஸ்டெபிள் சேஸ் போட்டியில் இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய வீராங்கனை பருல் சவுத்ரி முதலில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு அடுத்தபடியாக சீனாவைச் சேர்ந்த ஷாவாங் ஷூ இரண்டாவது இடத்தையும், ஜப்பானின் யோஷிமுரா ரெமிமி மூன்றாவது இடத்தையும் பிடித்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதங்களை வென்றுள்ளனர். 

அதேபோல், பாங்காக்கில் நடந்துவரும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது நாளில், தஜிந்தர் டூர் தனது ஷாட் புட் பட்டத்தை தக்கவைத்து ஆசிய சுற்றுகளில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறார்.  குண்டை வீசி எறிந்த பின்னர் அவருக்கு காயம் ஏற்பட்டதால், முடிவுகள் வெளியிடப்படும் வரை அவரால் அங்கு இருக்க முடியாது எனும் அளவிற்கு காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால், அவர் உடனே மருத்துவமனைக்கு விரைந்தார். அவரது உடல் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 

2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இதுவரை பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்:
 
நாள் 1
அபிஷேக் பால் (10,000 மீ. வெண்கலம்)
 
நாள் 2
ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம் தங்கம்),  அஜய் குமார் சரோஜ் (1500மீ தங்கம்),  அப்துல்லா அபூபக்கர் (டிரிபிள் ஜம்ப் தங்கம்),  ஐஸ்வர்யா மிஸ்ரா (400 மீ. வெண்கலம்),  தேஜஸ்வின் சங்கர் (டெகாத்லான் வெண்கலம்).
 

நாள் 3
தஜிந்தர் தூர் (ஷாட் புட் தங்கம்),  பருல் சவுத்ரி (3000மீ ஸ்டீபிள் சேஸ் தங்கம்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல் வெள்ளி). 

 
தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஜப்பான் 7 8 3 18
2 சீனா 3 3 1 7
3 இந்தியா 3 0 3 6
4 கஜகஸ்தான் 1 2 0 3
5 தாய்லாந்து 1 1 1 3
6 இலங்கை 1 0 2 3
7 உஸ்பெகிஸ்தான் 0 2 1 3
8 கொரியா 0 0 2 2
9 வியட்நாம் 0 0 1 1
9 சவூதி அரேபியா 0 0 1 1
9 மங்கோலியா 0 0 1 1