ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 தொடரானது இந்தாண்டு தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுபச்சலசாய் தேசிய மைதானத்தில் நடந்து வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த தொடரானது ஜூலை 12ம் தேதி தொடங்கி ஜூலை 16ம் தேதி நிறைவடைகிறது.
இந்த தொடரில் கலந்துகொள்ளும் இந்திய அணியில் ஆடவர் ஷாட் எட் சாம்பியன் தஜிந்தர்பால் சிங் டூர், 100 மீ தடை ஓட்டத்தில் இந்தியாவின் தேசிய சாதனை படைத்த ஜோதி யர்ராஜி , நீளம் தாண்டுதல் வீரர்களான முரளி ஸ்ரீசங்கர், ஷைலி சிங் மற்றும் முன்னாள் ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜின்சன் ஜான்சன் (1500 மீ), ஸ்வப்னா பர்மன் (ஹெப்டத்லான்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனா காரணமாக சீனாவில் ஹாங்சோவில் 2021ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு நடைபெறுகின்றன. இதற்கு முன்பு கடந்த 2019 தோஹா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இரண்டு தங்கம், ஏழு வெள்ளி மற்றும் ஏழு வெண்கலம் என 16 பதக்கங்களுடன் முடித்தது.
கடந்த 2017ம் ஆண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் 9 தங்கம் உள்பட 27 பதக்கங்களை வென்று அசத்தினர்.
இந்தாண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்க நாளில் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023: இந்திய வீரர்கள் பதக்கம் வென்ற பட்டியல்
வீரர் | போட்டி | பதக்கம் |
---|---|---|
அபிஷேக் பால் | ஆண்களுக்கான 10000 மீ | வெண்கலம் |
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 பதக்கங்களின் எண்ணிக்கை:
தரவரிசை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஜப்பான் | 4 | 2 | 0 | 6 |
2 | சீனா | 1 | 3 | 0 | 4 |
3 | தாய்லாந்து | 1 | 0 | 1 | 2 |
4 | கஜகஸ்தான் | 0 | 1 | 0 | 1 |
5 | இலங்கை | 0 | 0 | 2 | 2 |
6 | இந்தியா | 0 | 0 | 1 | 1 |
6 | வியட்நாம் | 0 | 0 | 1 | 1 |
இதுவரை நடந்த போட்டி முடிவுகள் பின்வருமாறு:
ஈட்டி எறிதல் - அன்னு ராணி - நான்காவது இடம், 59.10 மீ
1500 மீ - லில்லி தாஸ் - ஏழாவது இடம், 4:27.61
1000 மீ ஓட்ட பந்தயம் - ஆண்கள்
அபிஷேக் பால் - மூன்றாவது இடம், 29:33.26
குல்வீர் சிங் - ஐந்தாவது இடம், 29:53.69
இந்தியாவில் 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் நேரடி ஒளிபரப்பு மற்றும் நேரடி ஒளிபரப்பை எங்கே, எப்படி பார்ப்பது?
நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இந்தியாவில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. Asian Athletics 2023 YouTube சேனலில் ரசிகர்கள் லைவ் ஸ்ட்ரீமிங்கைப் பார்க்கலாம்.