ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி குரூப் பிரிவு போட்டிகளில் இந்திய அணி ஒரு தோல்வி, ஒரு டிரா மற்றும் ஒரு வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி மலேசியா அணியை எதிர் கொண்டது. 


 


இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் மலேசிய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதலாவது கால்பாதியில் கிடைத்த இரண்டாவது பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மலேசிய வீரர் ரஹீம் முதல் கோலை அடித்தார். இதனால் மலேசிய அணி முதல் கால்பாதியின் இறுதியில் 1-0 என முன்னிலை பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் மீண்டும் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரஹீம் இரண்டாவது கோலை அடித்தார். இதனால் முதல் பாதியின் இறுதியில் மலேசியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. 


இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது கால்பாதியின் தொடக்கத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா முதல் கோலை அடித்தது. அதன்பின்னர் நான்காவது கால்பாதியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சுனில் ஒரு ஃபீல்ட் கோலை அடித்தார். இதனால் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்திருந்தன. அதற்கு அடுத்த நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி மேலும் ஒரு கோலை அடித்து 3-2 என முன்னிலை பெற்றது. அதன்பின்னர் மலேசிய அணிக்கு கடைசி 5 நிமிடத்தின் போது ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி மலேசியாவின் ரஹீம் தன்னுடைய 3வது கோலை அடித்தார். இதனால் இரு அணிகளும் 3-3 என சமமாக இருந்தன. 


ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருந்ததால போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணி கடைசி சூப்பர் 4 போட்டியில் தென் கொரியா அணியை எதிர்த்து விளையாடுகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண