WTC 2021 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்..!

நடிகர் அஜித்தின் ரசிகர் ஒருவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் "வலிமை அப்டேட்" கேட்டுள்ளார்.

Continues below advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் பரபரப்பாக இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து இடையே நடைபெறும் இந்த போட்டியை காண 4000 ரசிகர்கள் மைதானம் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போட்டியை காண வந்த இந்திய ரசிகர் ஒருவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும், அந்த வலிமை அப்டேட் எங்க பா என கேட்டுள்ளது வைரலாகி வருகிறது.

Continues below advertisement

நடிகர் அஜித்தின் ரசிகர் ஒருவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் "வலிமை அப்டேட்" என்னும் பேனரை தூக்கி காண்பிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி கொண்டு இருக்கிறது. அட இங்கையும் வலிமை அப்டேட்டா ? என்று பலர் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு துவங்கி வருடமாகிவிட்டது, ஆனால் அதில் பல காலமாக எந்த ஒரு பெரிய அப்டேட்டையும் படக்குழுவினர் தரவில்லை. சரி தீபாவளிக்கு வந்து விடும், கிறிஸ்துமஸ், பொங்கல் என ஏதாவது ஒரு பண்டிகைகளுக்காவது அப்டேட் வரும் என காத்திருந்து காலம் கழிந்த அஜித் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, வலிமை அப்டேட் என்னாச்சு என அனைவரிடமும் கேட்க துவங்கிவிட்டனர். இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு விளையாட வந்த மொயின் அலி தொடங்கி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரை இந்த அப்டேட் கேள்விக்கு தப்பவில்லை. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத நடிகர் அஜித்தே இதை நிறுத்த அறிக்கை வெளியிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

ஆனாலும் ரசிகர்கள் அதை விடுவதாக இல்லை, எல்லை மீறிப்போன அமேசான் உதவியை அழைத்து வலிமை அப்டேட் கேட்டார். அதற்கு பதிலளித்த அமேசான் "வலிமை குறித்த உங்கள் அக்கறையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இதுகுறித்து தற்போது வரை நாங்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தொடர்ந்து எங்கள் இணையதளத்தில் இணைந்திருங்கள் அடுத்தகட்ட அப்டேட்களுக்காக" என்ன ரிப்ளை செய்தது.

இப்படி ரசிகர்கள் எங்கு சென்றாலும், கடைசியாக எப்போதும் போல் அவர்களுக்கு எழும் ஒரே கேள்வி "வலிமை அப்டேட் எங்க பாஸ்?"

Continues below advertisement
Sponsored Links by Taboola