தேனி அல்லிநகரம் அருகே பழமைவாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 3 நாள் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான கொடியேற்றம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்று ஏகாதசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாளுக்கு பாடல்கள் பாடினர். பின்னர் ஆலய வளாகத்தில் கொடிமரம் அருகே அமர்ந்திருக்கும் கருடாழ்வாருக்குவஸ்திரம் கட்டி கிரீடம் அணிவித்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்து தூபத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.


DMK On Nirmala Sitharaman: வெள்ள பாதிப்பு - ”வாட்ஸ்-அப் பல்கலைக்கழகம்” - நிர்மலா சீதாராமன், பாஜகவை விளாசும் திமுக


அதனை தொடர்ந்து கொடி மரப்பட்டத்திற்கு பூக்கள் தூவி தீபம் காட்டப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பி கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் வண்ண பட்டுடுத்தி அலங்கரிக்கப்பட்டிருந்த ஆண்டாளுக்கு மற்றும் மூலவர் வரதராஜ பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.


Ennore Oil Spill - CM Stalin: வெள்ள நீரோடு வெளிவந்த எண்ணெய் கசிவு - முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..




இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கொடியேற்றம் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதனை தொடர்ந்து மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம்  அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Top EVs of 2023: இந்திய சந்தையில் 2023-ஆம் ஆண்டில் அறிமுகமான சிறந்த மின்சார கார்கள் - டாப்-6 லிஸ்ட் இதோ


தொடர்ந்து 5-30 மணி அளவில் சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டனர். அதன் பின்பு ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரெங்கா ரெங்கா என குரல் எழுப்பி தரிசனம் செய்தனர்.