திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் உள்ள தூணில் தற்போது வரை தீபம் ஏற்றவில்லை. ஆண்டுதோறும் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படது.

Continues below advertisement

திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட (தீபத்தூண் என்று சொல்லப்படும் இடம்) இடத்தில் தீபம் ஏற்றப்படும் என எதிர்நோக்கி காத்திருந்த இந்து அமைப்பினர் கோவில் சன்னதி வீதியில் நின்று அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

கார்த்திகை தீபம் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனை, உள்ளூர் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். வழக்கமான இடத்தில் மட்டும் தீபம் ஏற்றியதால், ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து தவெக ஒழிக ஒழிக என்று இந்து அமைப்பினர், பாஜகவினர் கோஷம் எழுப்பினர்.

Continues below advertisement

முந்தையை திமுக அரசின் நிலைப்பாட்டை தவெக அரசும் எடுத்ததால் எதிர்ப்பு தெரிவித்து மலை அடிவாரத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளது. இதனால், அந்தப் பகுதி பதற்றமாக காணப்படுகிறது.