கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலய திருவிளக்கு பூஜை

கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் 13ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை.

Continues below advertisement

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன், அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன், அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் நற்பணி மன்றம் நடத்தும் 13 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

Continues below advertisement

 

 


 

தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன், அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ,அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் நற்பணி மன்றம் நடத்தும் 13 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர்.  அதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. திருவளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் தங்களது இல்லத்தில் இருந்து திருவிளக்குடன் ஆலயம் வந்தனர்.

 


அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சார்பாக வாழையிலை, திருவிளக்கு தேவையான திரி, மஞ்சள், குங்குமம், அரிசி உதிரி பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.  அதைத் தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் 1008 முறை வேத மந்திரங்கள் கூறி அதைத் தொடர்ந்து திருவிளக்குக்கு சிறப்பு குங்குமத்தால் அர்ச்சனை நடைபெற்றது.  பின்னர் அனைத்து திருவிளக்குக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டு தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 13 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

 


 

 

கரூர் மாவட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

 


 

பின்னர் ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பல்வேறு சிறப்பு பூஜை  மற்றும் 18 சித்தர்கள் சிறப்பு வழிபாடு  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர்,கோவை ஈரோடு, திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நள்ளிரவு 12 மணி அளவில் 18 சித்தர்களின் சிறப்பு யாக பூஜை திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு இரவு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

 

 

 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola