மேலும் அறிய
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம்
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பேரிகேடுகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

வைகாசி விசாகம்
Source : whats app
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன்
முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் கொண்டாப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக விழா (வசந்த உற்சவம்) கடந்த 31ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் புஷ்ப அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
சண்முக, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம்
இதே போல நேற்று வரை நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று வைகாசி விசாக விழா நடைபெற்றது. வைகாசி விசாகத்தையொட்டி, திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரத் துவங்கினர். உற்சவர் சன்னதியில் சண்முகர், வள்ளி - தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, கோயில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 5:30 மணி அளவில் பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்டு சண்முக வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம்
காலை முதல் மதியம் வரை, பக்தர்கள் கொண்டுவரும் பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி, அழகு குத்தி பல்வேறு வகையில் தங்களது நேற்றிக் கடனை செலுத்தினர். விழாவில் திருப்பரங்குன்றம் திருநகர் ஹார்விப்பட்டி மற்றும் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கக்கூடும் என்பதால் சன்னதி தெருவில் இருந்து கோவில் வாசல் வரை தேங்காய் நார்கள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பேரிகேடுகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















