மேலும் அறிய
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தரிசனம் !
சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சண்முகர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி காலை 6 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார்.

திருப்பரங்குன்றம்
Source : whatsapp
திருப்பரங்குன்றம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் சுமந்துவந்த குடங்களில் இருந்த பால் கொண்டு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவினையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 21ஆம் தேதி வைகாசி விசாக வசந்த உற்ஸவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சண்முகர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி காலை 6 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார்.
சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்
திருப்பரங்குன்றம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் சுமந்துவந்த குடங்களில் இருந்த பால் கொண்டு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் பால், இளநீர், பன்னீர், மயில், புஷ்பம், பறவை காவடிகள் எடுத்து வந்தனர். ஏராளமானோர் 12 அடி அகலம் கொண்ட வேலால் அலகு குத்தியும், ஏராளமானோர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தும் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
Before You Go
Spiritual concert | ஆன்மிக இசைக்கச்சேரி! அசத்திய இசைக்கலைஞர்கள்! பக்தியில் பார்வையாளர்கள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















