புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய வியாழன் நிகழ்ச்சியில் இயேசுபிரான் சீடர்களின் பாதங்களைக் கழுவும் புனித சடங்கு வேளாங்கண்ணியில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழ்த்திசை நாடுகளில் லூர்து நகரம் என அழைக்கப்படும் பெருமைக்குரியதாகும். இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயேசுபிரான் பங்கேற்ற கடைசி இரவு விருந்து நிகழ்ச்சி பேராலய கலையரங்கத்தில் நடைபெற்றது.
பெரிய வியாழன் என்று அழைக்கப்படும் இந்நிகழ்ச்சியில் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவும் சடங்கு நேற்று முன்னாள் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் ஆம்புரூஸ் தலைமையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீடர்கள் போன்று உடையணிந்த தொண்டர்களின் பாதங்களைக் கழுவினார். அதனைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெற்றது நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.