புதுச்சேரி: தை அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, ஆற்றங்கரையில் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சிவன், பெருமாள் சுவாமிகள் ஒன்றாக கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது தை அமாவாசையில் மட்டுமே நிகழ்வதால், பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசையில் திதி கொடுப்பது வழக்கம்.
தை அமாவாசையை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அமாவாசை தினங்களில் தை அமாவாசை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மை அளிப்பதாகும். அன்றைய தினம் கடல், ஆறு மற்றும் புண்ணிய நதிகளின் ஓரங்களில், இறந்த முன்னோர்களுக்கு, தாய், தந்தையர்களுக்கு திதி கொடுக்கலாம். அந்தவகையில் தை அமாவாசை தினமான சனிக்கிழமை புதுவையில் சிவன், பெருமாள் சுவாமிகள் ஒன்றாக கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது தை அமாவாசையில் மட்டுமே நிகழ்வதால், பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் திதி கொடுப்பது வழக்கம்.
இதில் மணக்குள விநாயகர், லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோயில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோயில், காமாட்சி அம்மன், சுந்தரவிநாயகர் கோயில், கவுசிக பாலசுப்பிரமணியர், தண்டுமுத்துமாரியம்மன், வரதராஜபெருமாள், பெத்துச்செட்டிபேட் வச்சாணியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுவை கடற்கரை சாலைக்கு கொண்டு வரப்பட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்புஇதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் புதுவை கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதே போல் வில்லியனூர் அருகே பழமை வாய்ந்த திருக்காஞ்சி காமாட்சி, மீனாட்சி உடனுறை கெங்கவராகநதீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காசிக்கு நிகரான புண்ணிய தலங்களில் ஒன்றாக பக்தர்களால் வழிபடும் திருக்காஞ்சியில் அமாவாசையன்று வழிபடுவது சிறப்பானது.ஆண்டுக்கு ஒருமுறை வரும் தை அமாவாசையன்று கெங்கவராக நதீஸ்வரரை வழிபட்டால் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி பித்ருதோஷம் விலகும் என்பது ஐதீகம் அதன் அடிப்படையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் திதி கொடுத்தவர்கள் மற்றும் வீட்டிலேயே திதி கொடுத்தவர்கள் காசி விஸ்வநாதரை வழிபட்டதன் பலனை பெறுகிறார்கள்.
இதேபோல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சங்கராபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணமும் செய்தனர். அங்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அங்கு திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். புதுவை கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல, தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்று கரையோரங்களில் நடந்தது. இதிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்