பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி  நேற்று மாலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து இன்று காலை சண்முகர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


CJI DY Chandrachud: கடமை ஓவர், இன்றுடன் விடை பெறுகிறார் தலைமை நீதிபதி சந்திரசூட் - தடாலடியாக வழங்கிய தீர்ப்புகள்




அறுபடைவீடுகளில் மூன்றும் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. பிற்பகல் நேரத்தில் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக்குமாரசாமி,  மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார். தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படை சூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்தார்.


Watch Video: இதுவே முதன்முறை! சவுதி அரேபியாவில் கொட்டிய பனிமழை! வெண்மை நிறமாக மாறிய பாலைவனம்!




சூரசம்ஹார நிகழ்சசியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.  300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சூரர்களை சம்ஹாரம் செய்த நிலையில் இன்று காலை சண்முகர் - வள்ளி, தெய்வயானைக்கு திருக்கல்யாணம் வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நடைபெற்றது. திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தனர்.


அம்பேத்கரை அதிகம் போற்றுவது நாங்களே! அடிமுட்டாள்களாக அவதூறு பரப்பாதீர்கள் - ராமதாஸ்


நேற்று ஆறாம் நாள் நிகழ்ச்சியாக அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்ற நிலையில்.  நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது.  மலைக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட மணமேடைக்கு எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.   அபிஷேகத்தைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சண்முகருக்கு பட்டாடை,  நறுமணமிக்க வண்ணமலர்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது.




மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் மந்திரம் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டது.  பின்னர் மஹாதீபாராதனை நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணையானையர் மாரிமுத்து கோவில் அதிகாரிகள் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்களும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.