கரூர், உழவர் சந்தை : இரண்டாம் சஷ்டி நாளாக முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம்.


 



 


கரூரில் கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு இரண்டாம் நாளாக முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் ஆலயம் உட்பட, பல்வேறு முருகன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வராஹி அம்மன் ஆலயத்தில் கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு இரண்டாம் நாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் எண்ணைக்காப்பு சாற்றி, அதைத் தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அழகன் முருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வள்ளி தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.



பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார், சுவாமிகளுக்கு தூப தீபங்கள் காட்டி, அதைத் தொடர்ந்து நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை காட்டினார். உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி கவச இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலய வருகை தந்து சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். உழவர் சந்தை வராகி அம்மன் ஆலயத்தில் பட்டுப்புடவை சாட்டப்பட்டு பல்வேறு வகையான நகைகள் அணியப்பட்டு அம்மன் ஜெகதோதியாக ஒளித்தார். ஐப்பசி மாத சிறப்பு வழிபாடு இரண்டாம் நாளாக நடைபெற்றது. முதல் நாளில் ஜெகஜோதியாக அம்மன் காட்சியளித்தார். அதேபோல இரண்டாம் நாளும் அதேபோல ஜெகஜோதியாக அம்மன் காட்சியளித்தார். அம்மனை கண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசித்தார்கள்.



 


கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி கவசம் விழா.


தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும், ஸ்ரீ பாலமுருகனுக்கு கந்த சஷ்டி கவசத்தை முன்னிட்டு, நாள்தோறும் காலை 11 மணியளவில் எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து மாலை அழகன் ஸ்ரீ பால முருகனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்ட பிறகு மகா தீபாராதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ  பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்திலும், பாலமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்திலும், புகழி மலை அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபான சுவாமி ஆலயத்திலும் நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.