அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் 84 ஊர் சோழிய வெள்ளாளர்களின் பொங்கல் விழாவில் 3000 புது மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து சமய அற நிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில் சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாகும். இந்த அய்யர் மலை கோவில் தரையில் இருந்து செங்குத்தாக 1107 படிகளைக் கொண்டது.ஸ்ரீ சுரும்பார் குழலி உடனுறை இரத்தினகிரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. புதிய மண் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரி தீர்த்தம் தெளித்து மண்பானையில் வைக்கப்பட்ட பொங்கல் சாதத்தை அபிஷேகம் செய்வதற்காக அனைத்து பொங்கல் பானையில் இருந்து சாதம் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பொங்கல் விழாவில் சோழிய வெள்ளாளர்கள் சமுதாயத்தைச் சார்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிய மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் சாதத்தை தனது உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பங்கிட்டு சாப்பிட்டனர். இந்த பொங்கல் விழாவில் சமூகத்தைச் சேர்ந்த உறவினர்கள். நண்பர்கள் என ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆவணி மாத வரலட்சுமி நோன்பை முன்னிட்டு உழவர் சந்தை வாராகி அம்மன் ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
கரூர் உழவர் சந்தை அருகே உள்ள பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத வரலட்சுமி நோன்பியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள் சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்டு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வாராகி அம்மனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். வாராகி அம்மனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத வரலட்சுமி நோன்பு சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.