சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம் தான். இதில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைக்கு என ஒரு விசேஷ நாள் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமலை வணங்குவது வழக்கத்தில் தொடர்ந்து வருகிறது. திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கு சென்று பெருமாளை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.

Continues below advertisement




புரட்டாசி மாதம் 3-வது வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு திருவேங்கடமுடையான் திருப்பதி அலங்காரத்தில் பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் ”கோவிந்தோ கோவிந்தோ” என கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.


தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாதம் 3-வது வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு திருவேங்கடமுடையான் திருப்பதி அலங்காரத்தில் மூலவர் பச்சை கற்பூரம் திருமண் கஸ்தூரி திலகம் சாற்றிக்கொண்டு  ஸ்ரீ வரதராஜ பெருமாள் திவ்ய அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதேபோல் உற்சவர் ஆன ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு கால சந்தி உற்சவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 




3-வது வாரம் சனிக்கிழமை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து காலை முதலே ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ”கோவிந்தோ கோவிந்தோ” என கோசங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சாமிக்கு சிறப்பான அலங்காரத்தை அனைத்து ஏற்பாடுகளையும் கண்ணன் பட்டாச்சியார் செய்திருந்தார். அதன் பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.




இதேபோல் போடி அருள்மிகு சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு மூலவராக அமர்ந்திருக்கும் சீனிவாச பெருமாளை வருடத்திற்கு ஒரு முறை காட்சி தரும் தங்கத் தாமரை பீடத்தில் ஆதிசேஷன் குறை பிடித்து சீனிவாச பெருமாள் வைகுண்ட நாதராக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன.  வைகுண்ட நாதராக காட்சி தரும் பெருமாள் பண மாலையில் சாத்தப்பட்டு சிறப்பு பூமாலையில் அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றன. பக்தர்கள் அதிகாலை 4 மணியிலிருந்து நீண்ட கீயூ வரிசையில் காத்திருந்து பெருமாளின் தரிசனம் பெற்று  சென்றனர். பக்தர்களுக்கு துளசி துளசி தீர்த்தம் பொங்கல் கேசரி புளிச்சாதம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கினர்.