Panguni Uthiram Pournami: நாளை பங்குனி உத்திரம்! திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போ போகலாம்?
Panguni Uthiram Pournami 2026: பங்குனி உத்திரம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலையில் நாளை பக்தர்கள் எப்போது கிரிவலம் செல்லலாம்? என்று கீழே காணலாம்.

Panguni Uthiram Pournami 2026: தமிழ் மாதங்களில் கடைசி மாதமாக வரும் மாதம் பங்குனி. இந்த மாதத்தில் வரும் நாட்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் பங்குனி உத்திரம். தமிழ்நாட்டில் பக்தர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் நாள் இந்த பங்குனி உத்திரம் ஆகும்.
நாளை பங்குனி உத்திரம்:
பங்குனி மாதத்தில் வரும் பெளர்ணமி நாளும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே பங்குனி உத்திரம் ஆகும். நடப்பாண்டிற்கான பங்குனி உத்திரம் நாளை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக, பெளர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமான ஒன்றாகும்.
கிரிவலம் செல்ல வேண்டிய நேரம் எது?
பெளர்ணமி திதி நாளை காலை 7.38 மணிக்கு தொடங்குகிறது. நாளை காலை தொடங்கும் பெளர்ணமி திதி நாளை மறுநாளான ஏப்ரல் 2ம் தேதி காலை 7.57 மணி வரை இருக்கிறது. இதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் பெளர்ணதி திதி உள்ள மேலே கூறிய நேரத்திற்குள் கிரிவலம் சென்று வருவது சிறப்பாகும்.
பொதுவாக, பெளர்ணமி, அமாவாசை நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பாக கருதப்படும். அதேசமயம், பங்குனி உத்திர நன்னாளில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அதுவும் பங்குனி உத்திரம் போன்ற சிறப்பு வாய்ந்த நாளில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
வழிபாட்டிற்கு சிறப்பு ஏற்பாடுகள்:
சிவபெருமான் - பார்வதி தேவி திருமணம் நடந்த நாளாக இந்த பங்குனி உத்திர நாளை புராணங்களில் கூறுவதால் இந்த நாளில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் தற்போது தமிழ்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக பக்தர்களும் குவிவதால் பக்தர்கள் வசதிக்காகவும், பக்தர்கள் தரிசனத்திற்காகவும் பல்வேறு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
முருக பக்தர்கள்:
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிவாலயங்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடுகள் நாளை நடைபெற உள்ளது. சிவாலயங்கள் மட்டுமின்றி முருகப்பெருமான் திருக்கல்யாணமும் நாளை நடைபெறும் என்பதால் முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் பங்குனி உத்திரத்திற்கான சிறப்பு வழிபாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பங்குனி உத்திரத்திற்காக பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவு பாத யாத்திரை செல்வது வழக்கம் ஆகும். அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















