கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சமூர்த்தி என்று அழைக்கப்படும் கற்பக விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி, அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, கல்யாண பசுதீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெள்ளி ரத வாகனத்தில் ஆலயத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க சுவாமிகள் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. ஆலயம் குடி புகுந்த பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி அதிகார நந்தி வாகனத்திலும், அம்பிகை அன்ன பறவை வாகனத்திலும் திருவீதி உலா காட்சி.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்திலும், மற்றும் அம்பிகை அன்னப்பறவை வாகனத்திலும் திருவீதி உலா காட்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்ற அதன் தொடர்ச்சியாக ஆலயம் மண்டபத்தில் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு கல்யாண பசுபதீஸ்வரர்வை அதிகார நந்தி வாகனத்திலும், அம்பிகையை அன்னப்பறவை வாகனத்திலும் கொலுவிருக்க செய்தனர். அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டிய பிறகு ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் பங்குனி மாத திருவிழாவின் அதிகார நந்தி வாகன திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.