கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும்.

 





இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. இப்படியான உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான உப கோயில்களுக்கு மாதந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.



 

இந்நிலையில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில்  மாதந்தோறும் எண்ணும் பணியானது நடைபெறும் நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் நடைபெற்றது.



இதில் உண்டியல் வருமானமாக 1கோடியே 47 இலட்சத்து 43 ஆயிரத்து 642 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 465 கிராம் தங்கம், 890 கிராம் வெள்ளியும் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 497 காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.