சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் தை மாத உத்ஸவத்தை முன்னிட்டு செல்வமுத்துக்குமார சுவாமி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 


February car launche: பிப்ரவரி மாதம் அறிமுகமாக உள்ள புதிய கார்கள் எவை? உங்களுக்கான கார் என்ன?




மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். மேலும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் இது விளங்கி வருகிறது. 


US Elections 2024: ரிப்பீட்டு.. அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை பழி தீர்ப்பாரா டிரம்ப்?




இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் கர்நாடக, ஆந்திர, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு ஆண்டு தோறும் தை மாத உத்ஸவ திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த ஜனவரி 27 -ம் தேதி கொடியேற்றத்துடன் விழாவானது துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் செல்வமுத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். யானை வாகனம், வெள்ளி இடும்பன் வாகனம், காமதேனு வாகனம் என நாள்தோறும் வீதிஉலா தரிசனமும் நடைபெற்றது.


Siragadikka Aasai:பார்லரில் வேலை செய்வதை சொன்ன ரோகிணி..அதிர்ச்சியில் மனோஜ்- சிறகடிக்க ஆசையில் இன்று!




தை மாத உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9 ம் நாள் திருவிழாவாக திருத்தேராட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்று. தேரோட்டத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது, தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் செல்வமுத்துக்குமாரசாமி எழுந்தருளினார். தேரோட்டத்தை வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயிலின் நான்கு வீதிகளை தேரில் வலம் வந்த, முத்துகுமாரசுவாமிக்கு வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து ஆராதனை நடைபெற்றது, வழி நெடுகிலும் பொதுமக்கள் பக்தி பரவசத்தில் வழிபாடு செய்தனர். 


Rachin Ravindra: டெஸ்ட் வாழ்க்கையில் முதல் இரட்டை சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த ரச்சின் ரவீந்திரா..!