பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 -ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று வெகு விமரிசையாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.




மயிலாடுதுறை அடுத்த  சீனிவாசபுரம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்  திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் அஸ்ரப் அலி தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமின் முன்னிலையில் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தனர். இத்தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு‌ வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழவும் தொழுகை நடத்தினர். பின்னர்,தொழுகை முடிந்ததும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


Palani Temple Hundiyal Collection: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?




தொடர்ந்து செல்போனில் செல்பி எடுத்தும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் வடகரை, அரங்கக்குடி, சங்கரன்பந்தல், ஆக்கூர், நீடூர், கிளியனூர், திருமுல்லைவாசல்,மேலச்சாலை, எலந்தங்குடி, பொறையார்  உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள  https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண