சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை காலத்தில் ஒரே நாளில் (24.12.2023) 1.63 லட்சம் பேர் மலை ஏறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை மண்டல பூஜை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மறுநாள் (27.12.2023) மண்டல பூஜை நடைபெற உள்ளது. நாளை (26.12.2023) ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாதாரனை நடபெறும். இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
மாத பிறப்பு நாளில் 5 நாட்களுக்கு சாமி தரிசனத்திற்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டாலும் கார்த்திகை, மார்கழி, தை மாதத்தில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூகை காலங்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கமானது. இந்த ஆண்டு கடந்த நவம்பர் 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் நடைமுறை பின்பற்றப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் முன்பதிவு செய்திருந்தனர். அதோடு, உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்களும் தரிசனத்திற்கு வந்திருந்தனர். இதனால் கோயிலில் ஏராளமானோர் கூடினர். இதையெடுத்து, பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேற்றைய தினம் மட்டும் (24.12.2023) மண்டல கால பூஜையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். மண்டல பூஜை கால வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
முதியோர், பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க இன்றைக்கு (25.12.2023) 70 ஆயிரம் பத்கர்களும், நாளை (26.12.2023) 64 ஆயிரம் பக்தர்களும் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 15 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது.
மண்டல பூஜை தினம்
வரும் புதன்கிழமை (27.12.2023) அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மண்டல காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. டிசம்பர்-31ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும். ஜனவரி 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20ம் தேதி காலை பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பாண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.
திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி இன்று மாலை (25.12.2023) ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். கடந்த 23-ம் தாதி தங்க அங்கி சபரிமலைக்கு புறப்பட்டது. இந்த ஊர்வலம் நாளை பிற்பகல் பம்பை கணபதி கோவில் வந்தடைகிறது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கல் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வருவார்கள்.
நாளை பிற்பகல் முதல் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை. நாளை மறுநாள் (27.12.2023) மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேசனம் முடிந்ததும் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.