கரூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு கரூர் காவிரி ஆற்றில் பொது மக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


 




 


புரட்டாசி மகாளய அமாவாசையோட்டி இறந்த முன்னோர்களின் நாள், நட்சத்திரம், நேரம் தெரியாதவர்கள் இந்த அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுக்கு சென்றடையும் என்பது ஐதீகம்.  இந்த நிலையில் மகாளய அமாவாசை தினமான  கரூர் காவிரி ஆற்றங்கரையோரம் நுாற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். முன்னதாக காவிரி ஆற்றில் புனிதநீராடி சூரியனை வணங்கி பிராத்தனை செய்தனர். 


 




 


கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள மாயனுார், வேலாயுதம்பாளையம், நெரூர், வாங்கல் காவிரி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் தர்பணம் கொடுத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து அவர்களது இஷ்ட தெய்வ ஆலயங்களுக்கு சென்று வழிபட்ட பின்னர் அவரது வீட்டில் முன்னோர்களுக்கு பிடித்த உணவு செய்து வழிபட்டு வருகின்றனர். அதேபோல காலை முதல் மகாளய அமாவாசையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் பொது மக்கள் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர்.