Maha Shivratri 2025: மகா சிவராத்திரிக்கு கண்டிப்பா இந்த கோவிலுக்கு போய்ட்டு வாங்க...!

சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது நல்லது.

Continues below advertisement

மகா சிவராத்திரி (Maha Shivaratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

Continues below advertisement

உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண்விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள். எனினும் இலங்கையின் கிழக்கே உள்ள திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள தென்கயிலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இவ்விழா ஆறு நாட்கள் இரவு கொண்டாடப்படுகின்றது. 

சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தரிசிப்பது நல்லது. அப்பொழுது சிவ பெருமானுடைய நமச் சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சிறந்தது. மகா சிவராத்திரியோடு தொடர்புடைய தலங்கள் பல உள்ளன. 

திருவைகாவூர்:- 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைகாவூரில் எழுந்தருளி உள்ளவர் வில்வவனேஸ்வரர் திருக்கோயில் இறைவி சர்வ ஜனரட்சகி. இத்தலத்தைச் சம்பந்தர், நாவுக்கரசர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பாடியுள்ளனர்.

திருவண்ணாமலை:- 

பிரம்மனும் திருமாலும் சிவபெருமான் நெருப்புவில் நின்ற போது முடி, அடி தேடித்தோல்வி அடைந்து சிவபெருமானை வணங்கிய தலம் திருஅண்ணாமலை. வணங்கிப் போற்றிய இருவருக்கும் காட்சி தந்தது சிவராத்திரி அன்றே ஆகும்.

திருக்கடவூர்:- 

மார்க்கண்டேயன் சிவனைச் சிவராத்திரி அன்றும் பூசித்துக் கொண்டிருந்த போது எமன் வந்து பாசக்கயிற்றைக் வீச இலிங்கத்திருந்து வெளிப்பட சிவபெருமான் தன் காலால் எமனை உதைத்தார். அத்தலம் தான் திருக்கடவூர் எமன் பூசித்த தலம். அருளாளர்களின் பாடல் பெற்ற தலம். இத்தலத்தை தரிசித்தால் எமவாதம் நீங்கும்.

காஞ்சிபுரம் :-

பார்வதி தேவியார் விளையாட்டாகச் சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால் சிவபெருமானால் சாபம் பெற்றுத் தவம் முழுமை அடையாததால் திருஅண்ணாமலையில் தவம் செய்து இடப்பாகம் பெற்றார். இவ்வரலாற்றைக் காஞ்சிபுராணம் மிக விரிவாகக்கூறுகிறது. இந்நிகழ்வு சிவராத்திரி அன்று நடந்தது. காஞ்சியின் ஒரு பகுதி உருத்திரச் சோலை எனப்பட்டதாகவும் காஞ்சிபுராணம் கூறுகிறது. காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரனைச் சிவராத்திரி அன்று வழிபட்டு அருளைப் பெறலாம்.

ஸ்ரீசைலம்:- 

சிவ மகா புராணத்தில் கூறப்பட்ட வேடன் கதை நடந்த இடம் ஸ்ரீசைலம் ஆகும். இங்கே நந்தி தேவர் மலை உருவில் வீற்றிருக்கின்றார். காஞ்சியில் மர உருவிலும் திருஅண்ணாமலையில் மலை உருவிலும் சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல ஸ்ரீசைலத்தில் மலை உருவில் நந்திதேவர் எழுந்தருளியுள்ளார்.

இத்தலத்தைப் திருப்பருப்பதம் என்றும் மல்லிகார் ஜூனம் என்றும் கூறுவர். இது 12 சோதிர்லிங்கத்தலங்களில் ஒன்று. சிவராத்திரியன்று இங்குள்ள பாதாளகங்கை என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தரிசித்தால் எல்லா நலன்களும் பெற்றும் இன்பம் அடையலாம்.

ஓமாம்புலியயூர்:- 

சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாக உபதேசித்த ஸ்தலம் ஓமாம்புலியூராகும். சிவமகா புராணத்தில் சொல்லப்பட்ட வேடன் கதை போன்ற ஒரு கதை இங்கும் உண்டு. சிவராத்திரியின் பெருமையை விளக்குகிறது. இந்த ஊரினை பிரணவ வியாக்ரபுரம் என்றும் கூறுவர். சிதம்பரத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.

திருக்கழுக்குன்றம்:- 

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஊர் திருக்கழுக்குன்றமாகும். இவ்வூரை ருத்திரகோடி என்பார்கள் கோடி ருத்திரர்கள் சிவராத்திரி அன்று சிவபூசை செய்து அருள் பெற்றதால் இது ருத்திரகோடி எனப் பெயர் பெற்றதாம். இக்கோயிலை சிவராத்திரியில் பூசை செய்தால் அவர்கள் பெற்ற அருள் நமக்கு கிடைக்கும்.

திருக்காளத்தி:-

மலைக்கோவிலில் ஒவ்வொரு சிவராத்திரியையும் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தேரில் காளத்திநாதர் பவனி வருகிறார். தேரோட்டம் திருக்கல்யாணம், கிரிவலம், ரிஷப வாகன சேவை முதலிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் கோகர்ணம், தேவிகாபுரம் முதலிய சிவத்தலங்களில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola