சிவ வழிபாடு அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். அதனால், சிவ வழிபாடு செய்யுங்கள் என்று சொன்னவுடனே அட போயா அவரை வழிபட தொடங்கிய பிறகுதான் பிரச்சனைகளே பெரிதாய் இருக்கு என்று சொல்லக்கூடியவர்களையும் பார்க்க முடியும். மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என படைத்தல், காத்தல், அழித்தல்   தொழில்களை செய்து வரும் கடவுள்களில் அழிக்கும் கடவுளான சிவன் ஒருவரின் தீய செயல்கள் மற்றும் எண்ணங்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் சிந்தையில் இருந்து கெட்ட எண்ணங்களை அழிப்பதோடு சிவ ரூபமாய் இருந்து வருகிறார் .

Continues below advertisement

சிவன் இந்த பூவுலகின் தந்தையாக பார்க்கப்படுகிறார். இவர் அனைத்து ஜீவராசிகளை பராமரிப்பதிலும் அவரவர்களின் கருமத்திற்கும் பிரார்த்தனைக்கு ஏற்ப பலனை கொடுப்பவர். சிவனின்றி அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. இன்பம் துன்பம் ஆகிய அனைத்தையும் சமமாய் பவிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துவது போல தான் தவக்கோளத்தில் இருப்பது போன்ற உருவமற்ற அருவுருவமாய் காட்சி தருகிறார் சிவ பெருமான்.  எத்தனை துன்பத்திலும் இருந்தாலும் சிவனடியார்கள் சிவன் போக்கே சித்தன் போக்கு என்று சிவன் பாதத்தில் தஞ்சம் அடைகின்றனர். சிவ பக்தர்கள் சிவன் பாதத்திலே சரணாகதி அடைகின்றனர்.

Continues below advertisement

இப்படி சிவபெருமானுக்கென பல்வெறு புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலங்கள் இருந்து வருகிறது. அப்படி ஒரு  சிவ வழிபாடு தளமான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை நதிக்கரை ஓரத்தில் பிரம்மாண்ட உருவத்தில் தவக்கோளத்தில் காட்சி தருகிறார் சிவபெருமான். தேனியிலிருந்து  ஆண்டிபட்டி செல்லும் வழியில் அதாவது ஆண்டிபட்டியிலிருந்து தேனி க.விலக்கு மருத்துவமனை கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சூரிய பகவான் ருத்ரன் பூ லிங்கம் அமர்நாத் லிங்கா குகைக் கோவில் உள்ளது. 

இந்த குகைக்கோவிலில் சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவா ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் பிரமாண்டம் இக்கோவில் குகை வடிவில் அமைந்திருப்பதும், சுமார் 40 அடி உயரத்தில் கோவிலின் நுழைவாயில் முன்பு தவக்கோலத்தில் காட்சி தரும் சிவபெருமானின் உருவம் பிரம்மிப்பை காட்டுவதுடன் மெய்சிலிர்க்க வைக்கிறது.  அதைத் தொடர்ந்து சிவபெருமானின் வலதுபுரத்தில் செல்லக்கூடிய குகையின் நுழைவாயிலில் விநாயகர் பெருமான் காட்சி தருகிறார். அதை தொடர்ந்து குகைக் கோவிலுக்குள் செல்லும் இருபுறமும் இருள் சூழ்ந்த நிலையில், சிவலிங்கங்கள் தொடர்ந்து ஆங்காங்கே இருப்பதைப் பார்க்க முடிகிறது. பல்வேறு சித்தர்களும் இந்த குகைக்குள் இருபுறமும் காட்சி தருவதை பக்தர்கள் மெய்சிலிர்க்க வணங்கி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து குகையின் மையப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட ருத்ராட்ச மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சிவ லிங்கம் பிரம்மாண்டமாக காட்சி தருவதை பார்க்க முடிகிறது. இந்த குகை கோவிலுக்குள் சென்று திரும்பும் போது மனதிற்கு அவ்வளவு திருப்தியாகவும் மனதிற்கு அமைதியாகவும் இருப்பதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுவதை நாம் கேட்க முடிகிறது. சிவபெருமானுக்கு பல்வேறு கோவில்கள் இருந்தாலும் தேனி மாவட்டத்தில் இந்த பிரம்மாண்டமான குகை வடிவிலான கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மட்டும் விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் கோவில் திறக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மகா சிவராத்திரி உள்ளிட்ட சிவனுக்கான உகந்த நாட்களில் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இக்கோவிலின் நுழைவு வாயிலின் இடது புறத்தில் தோன்றும் பைரவர் வழிபாடு என்பது சிறப்பு வழிபாடாக இருந்து வருகிறது.  இன்று மகா சிவராத்திரி நாளில் இக்கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதல் வழிபாட்டை தொடங்கி வருகின்றனர். குறிப்பாக இன்று இரவு முழுவதும் கோவிலில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளதால் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.