மேலும் அறிய

Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி வரலாறு - புராணக் கதைகள் சொல்வது என்ன?

Maha Shivaratri History 2025: மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவதற்கு புராண கதைகள் சொல்வதை இங்கே காணலாம்.

சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது எப்படி தோன்றியது என்பது பற்றி புராணங்களில் குறிப்பிடபட்டுள்ளவற்றை இங்கே காணலாம். 

இந்தாண்டு புகழ்பெற்ற மகா சிவராத்திரி பிப்ரவரி,26-ம் தேதி (புதன்கிழமை, பிப்ரவரி, 26,2025) கொண்டாடப்பட உள்ளது. 

மகா சிவராத்திரி

சிவராத்திரி என்பது சிவன், சக்தியின் கூடலை கொண்டாடும் விழா என்று சொல்லப்படுகிறது. இந்துக்கள் மாதந்தோறும் சதுர்தசி திதி நாளில் கிருஷ்ண பக்‌ஷத்தில் இந்த சிவராத்திரியை கொண்டாடுகின்றனர். மாசி மாதத்தில் வரும் இதே திதி பிரசித்தி பெற்றது. மகா சிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள் என்கின்றனர்.  இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்குமென நம்பப்படுகிறது.

இந்துக்களின் புராணங்களின்படி மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றுகிறார்.  முதன்முதலில் ஒரு மகா சிவராத்திரி நாளில் தான் நிகழ்ந்தது. விஷ்ணுவும், பிரம்மனும் இருவரும் சிவராத்திரி நாளில் லிங்க வடிவில் சிவனை முதன்முதலில் தரிசித்தனர் என்று சொல்லப்படுகிறது. மாத சிவராத்திரியன்று விரதம் மேற்கொள்ளும்போது அவர்களின் வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார் என்பதும் நம்பப்படுகிறது. மாக சிவராத்திரியின் வரலாற்று பின்னணி என்ன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

மகா சிவராத்திரி வரலாறாக புராணங்களில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

ஆலகால விஷம்: 

 ஆலகால விஷத்தினால் மக்கள் யாரும் பாதிக்கக்கூடாது என்று எண்ணிய சிவபெருமான், பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால விஷத்தினைத் தனது கழுத்தில் தாங்கி நீலகண்டனாக நின்றது சிவராத்திரி நாளன்றுதான் என்று கூறப்படுகிறது. மக்களின் உயிரைக் காப்பாற்ற இப்படி செய்தார். 

பிரம்மன் - திருமால் சண்டை 

பூவுலகின் உயிர்கள் தோன்றுவதற்கான காரணமாக இருக்கும் கடவுள் என சொல்லப்படுகிறவர் பிரம்மன், வாழ்வினை காக்கும் கடவுளான திருமால் ஆகிய இருவருக்குள் யார் பெரியவர் என்ற எண்ணம் எழுந்தது. இருவருக்கும் இடையே கருத்துமோதல் தொடங்கியது. தங்களுள் யார் பெரியவர் என்ற கேள்விக்கு விடைத் தேடி சிவபெருமானிடம் சென்றனர். ஈசனிடம் கேட்டுவிடலாம் என்று கையிலாயம் சென்றனர். எல்லாவற்றிற்கும் கதைகள் மூலம் பதில் சொல்லும் வழக்கம் கொண்டவர் சிவபெருமான்.  பிரம்மன், திருமால் இருவருக்கும் இதை விளக்கிட சிவபெருமான் ஒரு திருவிளையாடல் செய்ய முடிவெடுத்தார்.

சிவபெருமான் இருவருக்கும் ஒரு தேர்வு வைத்தார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவர் யாரோ அவரே, உங்களுள் பெரியவர் என்று கூறினார். வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார். திருமால் வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமிக்குக் கீழே சென்றார்.  திருமால் அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு பயணப்பட்டார். ஆனால், இருவருக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ஜோதி வடிவாய் மாறிய சிவன்

எவ்வளவு முயற்சி செய்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை.  தனது தோல்வியை ஒப்புக்கொண்டு திருமால் திரும்பினார்.   உயர உயரப் பறக்க முயன்ற பிரம்மன் களைப்படைந்தார். வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். அதனிடம் உதவி கோரினார். சிவபெருமானிடம் தலைமுடியை கண்டதாக கூறும்படி பிரம்மன் சொல்லியதைக் கேட்டு பேசியது சிவபெருமானுக்கு கோபத்தை உண்டாக்கியது. ஜோதி வடிவாய் இருந்த சிவன் அக்னிப் பிழம்பாக மாறினார்.  இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் மற்றும் தேவர்களும் சிவபெருமான் சாந்தியடைய வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தோன்றினார். இதுவும் சிவராத்திரி தினத்தில்தான்.

சிவன் - பார்வதி திருமணம்

சிவபெருமான் - பார்வதி இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டதும் மகா சிவராத்தி நாளன்று என்று கூறப்படுகிறது. சிவனின் கண்ணைப்பொத்தி விளையாடிய செயலால் விளைந்த குழப்பத்தைப் போக்க, உமாதேவி விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாள் என்று கூறப்படுகிறது. 

திரயோதசி, சதுர்த்தசி - இந்த திதிகளுமே விசேஷமானவை. திரயோதசி-  பார்வதியின் வடிவம். சதுர்த்தசி, சிவபெருமானின் வடிவம் என்று சொல்கின்றன புராணங்கள். 

சிவராத்திரி

சிவன் என்றதும் லிங்கமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவலிங்கத்தின் புராணக்கதை மகா சிவராத்திரியுடன்  தொடர்புடையது.இன்றைய நாளில்தான் சிவபெருமான் முதன்முறையாக லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. அப்போதிருந்து, இந்த நாள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. 

 மகா சிவராத்திரியன்று பூஜை செய்வது விரதம் இருந்து அவரை வழிபடுவது புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  சிவபெருமானின் பக்தர்கள் பகலில் விரதம் இருந்து இரவு முழுவதும் இறைவனை வணங்குகிறார்கள். சிவராத்திரியில் சிவனை வணங்குவது  மகிழ்ச்சியையும், செல்வ செழிப்பையும் வழங்குவதாக நம்பப்படுகிறது.  கோயில்களில் சிவனுக்கு பால், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று நான்கு கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெறும்.

 சிவராத்திரியன்று இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து சிவபெருமானை வணங்கும் நாள் ஆகும். சதுர்த்தசி திதி இருக்கும் பிப்ரவரி 26ம் தேதியே மகாசிவராத்திரி ஆகும். பக்தர்கள் வரும் பிப்ரவரி 26ம் தேதி இரவுதான்  கோயில்களில் நடக்கும் நான்கு கால பூஜையில் பங்கேற்கலாம். 


மேலும் வாசிக்க..

Maha Shivaratri 2025 Date: பக்தர்களே! மகாசிவராத்திரி 26ம் தேதியா? 27ம் தேதியா? இதுதான் சரியான நாள்

Maha Shivaratri 2025 : மகா சிவராத்திரி தோன்றியது எங்கு தெரியுமா ? தாழம் பூ விற்கு சாபம் கொடுத்த இடமும் இதான் ;முழு விவரம் உங்களுக்காக !

Freelancer Jhansi Rani. MA

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Varunkumar IPS : ’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
TVK Vijay: “வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
“வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
TVK Flag Issue: என்னடா இது தவெக-விற்கு வந்த சோதனை.!! கட்சிக் கொடிக்கு தொடரும் சிக்கல் - நீதிமன்றத்தில் புதிய வழக்கு
என்னடா இது தவெக-விற்கு வந்த சோதனை.!! கட்சிக் கொடிக்கு தொடரும் சிக்கல் - நீதிமன்றத்தில் புதிய வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Varunkumar IPS : ’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
’ஆபரேஷன் TVK – சென்னை வரும் வருண்குமார்’ இதுதான் அசைண்மெண்டா..?
TVK Vijay: “வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
“வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்“ - தவெகவின் 2-வது மாநில மாநாட்டு தேதியை அறிவித்த விஜய்
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
Tesla Model Y: பெயிண்டுக்கே புல்லட் விலை, முழு செல்ஃப் ட்ரைவிங்கிற்கு தனி கார் விலை - டெஸ்லா மாடல் Y தேறுமா?
TVK Flag Issue: என்னடா இது தவெக-விற்கு வந்த சோதனை.!! கட்சிக் கொடிக்கு தொடரும் சிக்கல் - நீதிமன்றத்தில் புதிய வழக்கு
என்னடா இது தவெக-விற்கு வந்த சோதனை.!! கட்சிக் கொடிக்கு தொடரும் சிக்கல் - நீதிமன்றத்தில் புதிய வழக்கு
Top 10 News Headlines: ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
ஆட்சியில் பங்கு-அன்புமணி அதிரடி, இன்றும் குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் சொன்ன நல்ல தகவல் - 11 மணி செய்திகள்
Hybrid Midsize SUV: இப்பவே ரோட்ல இந்த 4 எஸ்யுவி தான் அதிகம் ஓடுது.. இதுல ஹைப்ரிட் இன்ஜின் அப்கிரேடும் வருதாம், எந்த கார்கள்?
Hybrid Midsize SUV: இப்பவே ரோட்ல இந்த 4 எஸ்யுவி தான் அதிகம் ஓடுது.. இதுல ஹைப்ரிட் இன்ஜின் அப்கிரேடும் வருதாம், எந்த கார்கள்?
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
Anbumani Statement: ‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Embed widget