பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது. 1.2டன் வரத்து உள்ளது என்றும், பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்தனர்.

Continues below advertisement


கார்த்திகை மாத சிறப்பு


இந்து மதத்தில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தனித்துவமான சிறப்பை கொண்டுள்ளது. அந்த வகையில் கார்த்திகை மாதம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் மாதங்களில் 8- ஆவது மாதமாக வரும் இம்மாதம் ஆன்மிக மாதமாக அறியப்படுகிறது. சபரிமலை சீசன், முருகன் கோயிலுக்கு மாலையிட்டு பாதயாத்திரை செல்லுதல், கார்த்திகை தீபம் என இந்த மாதம் ஆன்மிக மாதமாகவே பார்க்கப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் இணையும் நாள் “திருக்கார்த்திகை” பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 3- ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. 


கார்த்திகை முதல் நாள்


ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாள் 1 மண்டலம் அல்லது 24 நாள் 1/2 மண்டலம் அல்லது 12 நாட்கள் 1/4 மண்டலம் என தங்களது விரதத்தை மேற்கொண்டு அதன் தொடர்ச்சியாக இருமுடி கட்டி கேரளாவில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று தங்களது நேர்த்தி கடனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று தமிழகத்தில் பகுதியில் ஆலயங்களில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் குளித்து நீராடி ஆலயத்தில் உள்ள குருசாமியிடம் மாலை அணிவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து ஆலயங்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கார்த்திகை முதல்நாளான இன்று பூக்களின் விலை நிலவரம் குறித்து காணலாம்.


மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:



* மதுரை மல்லி கிலோ ரூ.800,

 

*பிச்சி கிலோ ரூ.500,

 

* முல்லை கிலோ ரூ.500,

 

* செவ்வந்தி கிலோ ரூ.150,

 

* சம்பங்கி கிலோ ரூ.40,

 

* செண்டு கிலோ மல்லி ரூ.50,

 

* கனகாம்பரம் (வரத்து இல்லை),

 

* ரோஸ் கிலோ ரூ.150,

 

* பட்டன் ரோஸ் கிலோ ரூ.180,

 

* பன்னீர் ரோஸ் கிலோ ரூ.200,

 

* கோழிக்கொண்டை கிலோ ரூ.80,

 

* அரளி ரூ.150,

 

* மரிக்கொழுந்து (வரத்து இல்லை),

 

* தாமரை (ஒன்றுக்கு) ரூ.10 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது.1.2டன் வரத்து உள்ளது என்றும், பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது என்றும், வரத்து குறைவாக உள்ளதால் விலையும் சற்று அதிகமாக இருக்கும் என்றும் மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்தார்.