பக்தர்கள் நிம்மதியா தரிசனம் பண்ணனும் அதுக்காக இரவெல்லாம் கண் முழிச்சு எல்லாம் ஏற்பாடு பண்ணுவோம் - இஸ்லாமிய தம்பதி பேட்டி.

சித்திரைத் திருவிழா 2026

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்மலை அடிவாரத்தில் உள்ள அழகர் கோயிலில் இருந்து சுந்தராஜபெருமாள் நேற்று கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடத்தில் தங்க பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் இன்று காலை மதுரை மூன்றுமாவடி பகுதியில் இருந்து கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வானது நடைபெற்றது.  வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் கள்ளழகர் தங்க பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார். கோடை வெயிலின் தாக்கம் உள்ள நிலையில் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக பல்வேறு அமைப்பினரும் தொண்டு நிறுவனங்களும் சாலையோரங்களில் நீர் மோர் பந்தல் அமைத்தும் அன்னதானம் வழங்கியும் வருகின்றனர்.

கள்ளழகர் எதிர் சேவை இந்நிலையில் மதுரை கோ. புதூர் கற்பகவிநாயகர் காலனி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியான காதர்பாய் - சுல்தான் பீவி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளழகர் எதிர் சேவையின் போது பக்தர்கள் நிழலில் நின்றபடி சாமி தரிசனம் செய்வதற்காகவும் கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இளைப்பாறுவதற்காகவும் பக்தர்களின் தாகத்தை தீர்ப்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் சாமியானா பந்தல் அமைத்தும், நீர்மோர் பந்தல் அமைத்தும் வருகின்றனர். தங்களது குடும்பத்துடன் இரவு முழுவதிலும் கண் விழித்து தங்களது சொந்த செலவில் கோ.புதூர் பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து கள்ளழகரின் பக்தர்கள் நிழலில் நின்று சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நீர்மோர் நீர் மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு புளியோதரை உள்ளிட்ட உணவுகளையும் வழங்கினர். கள்ளழகர் சித்திரைத் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம் என்ற பதாகைகளோடு மும்மதத்தைச் சார்ந்த கடவுள்களின் உருவப் படங்களை வைத்து நீர்மோர் பந்தல் அமைத்துள்ளனர். கள்ளழகர் எதிர்சேவை தொடங்கி மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரையும் சாலையின் இருபுறங்களிலும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். இது குறித்து பேசிய இஸ்லாமிய தம்பதியினர்..."  எங்க மச்சான் அழகர் எங்கள பாக்க வர்றாரு சந்தோஷம் எல்லாரும் நிம்மதியா சாமி கும்பிட வேண்டும் என்பதற்காக சாமியானா பந்தல் அமைக்கிறோம். நீர் நாங்கள் வருசம்வருசம் கள்ளழகரை பார்க்கும் போது குழந்தை போல மாறி மகிழ்ச்சியாக இருப்போம். ஒவ்வொரு ஆண்டும் சொந்த செலவில் பக்தர்களுக்காக செய்து வருகிறோம். கடவுளுக்காக செய்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடவுளுக்கு செய்யும் போது தான் அனைத்து செல்வங்களும்  கிணற்றில் அள்ள அள்ள தான் நீர் ஊரும் என்ற வகையில் கடவுளுக்கு செய்வது ஈடு செய்ய இயலாதது கொடுக்க கொடுக்க வரும் என தெரிவித்தனர். மேலும் கள்ளழகர் எதிர்சேவையில் வரும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் மீண்டும் கோட்டை நோக்கி திரும்பும் போது கவலையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பக்தர்களுக்காக இந்த சேவையை செய்து வருகிறோம். பக்தர்கள் மனநிம்மதியோடு சாமி தரிசனம் செய்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்தனர். தாயாக பிள்ளையாக இருந்து இது போன்று செய்து வருகிறோம் என தெரிவித்தார்