சங்கடங்களை தீர்ப்பதில் சனீஸ்வர பகவானுக்கு நிகர் சனீஸ்வரன் தான். என்று மெச்சும் அளவிற்கு சனீஸ்வரன் தன்னை நம்பும் நபர்களுக்கு நம்பிக்கையையும்,  தீர்வையும் கொடுப்பார்.  அப்படியான சனீஸ்வரர் தெய்வங்களில் மேற்கு நோக்கி தனிக் கோயிலாக அமைந்திருக்கும் சோழவந்தான் சனீஸ்வரர் குறித்து பார்க்கலாம். மதுரை மாவட்டத்தில் பெயரிலேயே சோலை இருக்கும் சோழவந்தானில் தான் கிழக்கு பார்த்த சனீஸ்வரர் அமைந்துள்ளார். பாதங்கள் பட்டாலே பாவம் தீரும் என நம்பப்படும் ஒரே சனீஸ்வரர் சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் தான்.



கொடைக்கானல் சாலையில் இருக்கும் சனீஸ்வரர் வைகை ஆற்றங்கரையில் வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு. திருநள்ளாறு சனீஸ்வரனை வணங்க சிவனை வணங்க வேண்டும். குச்சனூர் சனீஸ்வரனை வணங்க கருப்பண சாமியை வணங்க வேண்டும் அதைப்போல் சோழவந்தான் சனீஸ்வரன் சிறப்பு மேற்கு நோக்கி அமைந்திருப்பது தான். விஷாக நட்சத்திரக்காரர்களுக்கு சிறந்த ஸ்தலம்.



விஷாகத்தன்று வில்வபொடி, மஞ்ச பொடி, பால், தயிர், தேன், இளநீர், திரவியபொடி, நெல்லிப் பொடி, மஞ்சள் பொடி, உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படும். மற்ற நட்சத்திர காரர்கள் சனிக்கிழமை அபிசேகம், விளக்கு போடுதல் உள்ளிட்டவை செய்தால் நினைத்தகாரியம் நிறைவேறும். மஹா பெரியவா வந்த ஸ்தலமாக பார்க்கப்படுவது கூடுதல் சிறப்பு. இந்நிலையில் இந்த ஆலயத்தின் அர்சகர் ராமசுப்ரமணிய சாமி தற்போது சனிப்பெயர்ச்சி வரவில்லை என தெரிவிக்கிறார்.



இதுகுறித்து அவர் கூறுகையில்.." வரும் 17-ம் தேதி சனிப்பெயர்சி என்ற குழப்பம் நீடிக்கிறது.  சார நட்சத்திரம் 27 ஜனவரி 2023-ல் அவிட்டம் முதல் மஹர ராசிக்கி மாறுகிறார். அதே போல் 29 மார்ச் 2023-ல் அவிட்டத்தில் இருந்து மஹரத்திற்கு மாறுகிறார். ஆனால் தற்போது வரை சோமகிருத பஞ்சாங்கம் வரவில்லை என்பதால் சனிப்பெயர்சி கிடையாது. தற்போது நடப்பது சுபகிருதவருடம், சோமகிருத வருடத்தில் தான் சனிப்பெயர்சி நடைபெறும். அது பஞ்சாங்கம் வந்தால் தான் தெரியும்" என்கிறார்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண