அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில், மொத்தம் எத்தனை மண்டகப்படிகள் உள்ளது, அதன் விவரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட உத்தரவிட வேண்டும்
மதுரையை k.k.நகரை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில், மதுரையின் பாரம்பரிய சித்திரைத் திருவிழாவில் 'மண்டகப்படிகள்' மற்றும் 'எழுந்தருளல் நிகழ்வுகளில் நிலவும் சாதிய அடையாளங்களை நீக்கி, சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.
மண்டகப்பிடி அனுமதி கொடுப்பதற்கு விதிமுறைகள் ஏதும் உள்ளதா
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மண்டகப்படிகள், பரம்பரை வழியா, அல்லது ஜாதி அடிப்படையில் கொடுக்கப்படுகிறதா. மண்டகப்பிடி அனுமதி கொடுப்பதற்கு விதிமுறைகள் ஏதும் உள்ளதா. திருவிழா ஆரம்பித்து உள்ள நிலையில் கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனு குறித்து எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க இயலாது. நமது அரசியலமைப்பில் கூறியுள்ள படி உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இது நமது கடமை எனவே, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில், மொத்தம் எத்தனை மண்டகப்படிகள் உள்ளது, அதன் விவரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
