மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் தடுமாறி கீழே விழுந்த பக்தர்கள் மூன்று பேர் மயக்கம் பரபரப்பு. நல்வாய்ப்பாக குழந்தைகள் கூட்டநெரிசலில் இருந்து தப்பினர். கள்ளழகர் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் என்று காலை 5:47 மணிக்கு வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார். முன்னதாக கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதிக்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனுமதி அட்டையுடன் வந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதான வாசல் வழியாக அனுமதி அட்டைப்பெற்ற பக்தர்களை அனுப்பிய போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் திடிரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் தடுத்ததால் திடீரென பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். அப்போது ஒருவருக்கொருவர் மிதித்ததில் இரண்டு பெண்கள் மற்றும் மூதாட்டி என மூன்று பேர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக குழந்தைகள் கூட்டநெரிசலில் இருந்து தப்பினர்.
Madurai Chithirai Festival ; வைகை ஆற்றிற்குள் டோனி, அஜித் படத்தை காண்பித்து உற்சாகமடைந்த இளைஞர்கள் !
அருண் சின்னதுரை | 01 May 2026 03:58 PM (IST)
வைகை ஆற்றிற்குள் டோனி, அஜித் படத்தை காண்பித்து உற்சாகமடைந்த இளைஞர்கள் - வைகையாற்றிற்குள் சிறுவனை சராமாரியாக தாக்கிய இளைஞர்கள் - விரட்டியடித்த காவல்துறையினர்.

சித்திரைத் திருவிழா
அனுமதி அட்டை உள்ள நபர்களை முறையாக அனுமதிக்க வேண்டுமென அறிவுரை மூச்சு திணறல் ஏற்பட்ட மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில் அனுமதி அட்டை பெற்றவர்களை அனுமதிப்பதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்ததால் அதிகளவிற்கான நபர்கள் ஆழ்வார்புரம் வைகை ஆற்று பகுதியில் கூடினர். இதனால் தொடர்ந்து அந்த பகுதி நெருக்கடியான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேரடியாக சென்று அனுமதி அட்டை உள்ள நபர்களை முறையாக அனுமதிக்க வேண்டுமென காவல்துறையினரிடம் அறிவுறுத்தினார்.
மகேந்திர சிங் தோனி மற்றும் அஜித் புகைப்படங்கள் மேலும் நெரிசலின்றி பக்தர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் பின்னர் பாதுகாப்புடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடிய நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் தங்களது கைகளில் மகேந்திர சிங் தோனி மற்றும் அஜித் புகைப்படங்களை வைத்தவாறு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே பல்லாயிரக்கணக்கானோர் கூடிய கூட்டத்தின் நடுவே சிறுவன் ஒருவரை இளைஞர்கள் சூழ்ந்து தாக்குவது போன்ற நிகழ்வு நடைபெற்றது சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனைப் பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று அவர் சிறு தடியடி நடத்தி கலைய செய்தனர்.
Published at: 01 May 2026 03:58 PM (IST)