கள்ளழகர் திருக்கோயிலில் சித்திரத் திருவிழா பெருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில்  முன்னேற்பாடு, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
சித்திரைத் திருவிழா 2026
 
மதுரையில் சித்திரைத் திருவிழா 2026 துவங்கியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நிறைவு பெற்று, தினமும் கோயிலை அம்மனும், சுவாமியும் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். 
 
* மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழா.

இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது,

நாளை ஏப்ரல் 26-ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது,

அதே போல் ஏப்ரல் 27-ஆம் தேதி மீனாட்சி திக் விஜயம் நடைபெறுகிறது,

முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல்-28 ஆம் தேதி நடைபெறுகிறது,

மக்கள் எதிர்பார்க்கும் திருத்தேரோட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.

* கள்ளழகர் கோயிலில் நடைபெறும் திருவிழா.

 29.04.2026 சித்திரை -16 புதன் கிழமை 6.15 மணிக்குள் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்படுதல்

30.04.2026 சித்திரை -17 வியாழக்கிழமை காலை 5.30 5 6.30 மணி வரை எதிர்சேவை தங்க பல்லக்கில் புறப்படுதல்
 
30.04.2026 சித்திரை -17 வியாழக்கிழமை தல்லாகுளத்தில் இருந்து வைகை நதிக்கு குதிரை வாகனத்தில் புறப்படுதல்
 
01.05.2026 சித்திரை -18 வெள்ளிக்கிழமை வைகை நதியில் குதிரை வாகனத்தில் எழுந்தருளல்
 
01.05.2026 சித்திரை -18 வெள்ளிக்கிழமை இராமராயர் மண்டகப்படியில் குதிரை வாகனத்தில் தீர்த்தவாரி
 
02.05.2026 சித்திரை -19 சனிக்கிழமை தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல்
 
02.05.2026 சித்திரை -19 சனிக்கிழமை இரவு இராமராயர் மண்டபத்தில் தசாவதாரம்
 
04.05.2026 சித்திரை -21 திங்கட்கிழமை மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் புறப்படுதல்
 
05.05.2026 சித்திரை -22 செவ்வாய்க்கிழமை  திருமாலிருஞ்சோலை (இருப்பிடம் வந்து சேருதல்)
 
 
முன்னிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில்  முன்னேற்பாடு பணிகள்
 
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில் இன்று (25-4-2026) மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் சித்திரத் திருவிழா பெருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில்  முன்னேற்பாடு, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஹரிகரன் ஆகியோர் உடன் உள்ளார்.