மேலும் அறிய
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் & தேரோட்டம் தேதிகள் அறிவிப்பு!
ஏப்ரல் 28ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம்; 29இல் தேரோட்டம் - சித்திரைத் திருவிழாவுக்கு தயாராகும் மதுரை

மீனாட்சியம்மன் கோயில்
மதுரையின் முக்கிய திருவிழாக்களுள் ஒன்றாக கருதப்படும் சித்திரை பெருவிழாவில் ஏப்ரல் 28ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மறுநாள் 29ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
மதுரை சித்திரைத் திருவிழா 2026
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இந்நிலையில் சித்திரைத் பெருவிழா வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் 2-ஆம் நாள் நிகழ்வில் பூத மற்றும் அன்ன வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் அம்மனும் சுவாமியும் திருஉலா நடைபெறும். ஏப்ரல் 21-ஆம் தேதி 3-ஆம் நாள் நிகழ்வில் கைலாச பருவதம் மற்றும் காமதேனு வாகன உலா நான்கு மாசி வீதிகளிலும் நடைபெறுகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறும் நான்காம் நாள் திருவிழாவில் தங்க பல்லக்கில் அம்மனும், சுவாமியும் உலா வருகின்றனர். இந்நிகழ்வில் காலை 9 மணி அளவில் கிழக்கு சித்திரை வீதி, மீனாட்சி கோவில் தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, தொட்டியன் கிணற்று தெரு, சின்னக் கடைத்தெரு, தெற்கு வாசல் வழியாக வில்லாபுரத்தில் அமைந்துள்ள பாகற்காய் மண்டகப்படியில் சுவாமி அம்மனும் எழுந்தருளுகின்றனர். பிறகு மாலை 6 மணி அளவில் அங்கிருந்து தங்கப் பல்லக்கு புறப்பட்டு இரவு கோவிலை வந்தடையும்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் 5-ஆம் திருநாளில் தங்கக் குதிரை வாகன உலா மற்றும் வேடர் பறிலீலை நிகழ்வுகள் மாசி வீதிகளில் நடைபெறுகின்றன. ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் ஆறாம் நாள் திருநாளில் ரிஷப வாகன உலா மற்றும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அன்றைய நாள் காலை, மாலை இரு வேலைகளிலும் தங்க சப்பரத்தில் நான்கு மாசி வீதிகளில் அம்மனும் சுவாமியும் திருஉலா வருகின்றனர். ஏப்ரல் 25ஆம் தேதி 7-ஆம் நாள் நிகழ்வில் நந்திகேஸ்வரர் மற்றும் யாளி வாகன உலா நடைபெறுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் 8-ஆம் நாள் நிகழ்வில் அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. வெள்ளி சிம்மாசனத்தில் நான்கு மாசி வீதிகளில் சுவாமி எழுந்தருளுகின்றார். 9-ஆம் திருநாளான ஏப்ரல் 27ஆம் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழாவின் மைய நிகழ்வான ஏப்ரல் 28ஆம் தேதி பத்தாம் திருநாளில் அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8 59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பதினோறாம் திருநாளான ஏப்ரல் 29ஆம் தேதி திருத்தேரோட்டம் மாசி வீதிகளில் நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாசி வீதிகளிலும் அம்மன் மற்றும் சுவாமியின் தேர் வலம் வருகிறது. பன்னிரண்டாம் திருநாளான ஏப்ரல் 30ஆம் தேதி அன்று தெய்வேந்திர பூஜை மற்றும் ரிஷப வாகன உலா நடைபெறுகிறது என மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















