கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷ விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும்விழா சிறப்பாக நடைபெற்றது.


கரூர் சின்னாண்டாங் கோவில் பகுதியில் உள்ள அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற 03/07/2023 திங்கட்கிழமை காலை நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு ஆலயத்தில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று யாகசாலை அமைக்கும் இடத்தில் முகூர்த்த கால் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கற்பக விநாயகர்


 




வாசலில் முகூர்த்த காலை பிரதேச செய்து அதை தொடர்ச்சியாக முகூர்த்த காலுக்கு சந்தன பொட்டிட்டு, வண்ண மாலைகள் அணிவித்து தொடர்ச்சியாக பக்தர்கள் முகூர்த்த காலை தோளில் சுமந்தவாறு யாகசாலை அமையவிருக்கும் இடத்திற்கு வந்தடைந்தனர். அதன் தொடர்ச்சியாக முகூர்த்தக்கால் நடுப்பணி சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தின் முக்கிய நிர்வாகிகள் முகூர்த்த காலுக்கு பால் மற்றும் நவதானியங்களை நட்டனர். அதைத்தொடர்ந்து முகூர்த்த காலுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற முகூர்த்த கால் நடும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 



 


கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஸ்வாமி இன்று பஞ்ச பிரகாரம் வாகனத்தில் திருவீதி உலா காட்சி.


தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெரும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாள்தோறும் இரவு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ மாவடி ராமசுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி தருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற சுவாமிகள் திருவீதி உலாவில் மாரியம்மன் மற்றும் ஆவடி ராமசுவாமி பஞ்ச பிரகாரத்தில் திருவீதி விழா காட்சியளித்தனர் .


 


 




ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் வைகாசி மாத சுவாமி திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து தேங்காய், பாலம் பிரசாதத்துடன் தங்களது நேர்த்திக் கடமையை செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு கரூர் மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மண்டக படி நிர்வாகிகள் சார்பாக கரூர்- கோவை சாலை அஜந்தா திரையரங்கம் அருகே பக்தர்கள் விருப்பத்திற்கு இணங்க பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.