தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷே விழா கடந்த 2020 ஆம் ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கும்பாபிஷே விழா தேதியில் ஆண்டு விழா சிறப்பாக ஆலயம் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை மாலை முதல் கால யாக வேள்வி நடைபெற்று அதை தொடர்ந்து இரண்டாம் காலயாக வேள்வி நடைபெற்றது.
பின்னர் உற்சவர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து இரவு புறப்பாடலாக பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மேல தாளங்கள் முழங்கு ஆலயத்தில் இருந்து புறப்பட்டது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. ஆலயம் வந்த பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாதனையை காட்டினார்.
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நிறைவு ஆண்டு விழாவை முன்னிட்டு ஆலயத்தில் நடைபெற்ற பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழா.
கரூர் நகர பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்த வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு கார்த்திகை மாத சங்கடகர சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி , பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து மூலவர் கணபதியை மனமுருகி வழிபட்டுச் சென்றனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.