கரூர் பண்டரிநாதன் கோயிலில் தொடர்ந்து 100-வது ஆண்டாக கருவறையில் உள்ள மூலவரின் பாதத்தை பக்தர்கள் தொட்டு தரிசிக்‍கும் ஆசாட ஏகாதசி நிகழ்ச்சியில் ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.


 


கரூர் மாநகர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பண்டரிநாதன் கோயிலில் பக்தர்கள் மூலவரின் பாதத்தை தொட்டு தரிசிக்‍கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆசாட ஏகாதசி விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்‍கு துக்‍காரம் கொடி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்‍கிய நிகழ்வாக இன்று, பண்டரிநாதன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், மஞ்சள், திருமஞ்சல், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூதேவி அம்மனுடன் பண்டரிநாத சுவாமிக்கு பல்வேறு நறுமண பூக்கள் மற்றும் வண்ண மாலைகள் அணிவித்த பிறகு தூப தீபம் காண்பிக்கப்பட்டு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.


 


 




பின்னர் மூலவரின் பாதத்தை தொட்டு வணங்க பக்‍தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 100-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து கருவறைக்குள் சென்று மூலவரின் பாதத்தை தொட்டு தரிசனம் செய்தனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.