கரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற  நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பண்டரிநாதன் சன்னதி தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாண்டுரங்கன் சுவாமி ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு 102 வது உறியடி மற்றும் வழுக்கை மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.


 




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள மூலவர் ரகுமாய் சமேத பண்டரிநாதனுக்கும், உற்சவருக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் காலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர்.


 


 




அதைத் தொடர்ந்து மாலை கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்த குழந்தைகளுக்கு கரூர் திருக்குறள் பேரவையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து உற்சவர் பண்டரிநாதன் சிறப்பு ரத வாகனத்தில் வந்தடைந்த பிறகு ஆலய வாசலில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த உறியடி நிகழ்ச்சியில் கிருஷ்ணன் வேடம் அனிந்த நபர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு உறியடியை அடித்தார்.




 


அதைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் இணைந்து வழுக்கை மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வழுக்கு மரம் ஏறி அப்பகுதி இளைஞர்கள் சாதனை புரிந்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பண்டரிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.