தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅலங்காரவல்லி, ஸ்ரீசௌந்தரனாகி உடனுறை ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோம வார பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் தேன், நெய் இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் மற்றும் விபூதியால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழாவை முன்னிட்டு பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அதன் அருகே 108 சங்குகளால் சிறப்பு யாகம் நடைபெற்றது.
பின்னர் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தாலும் 108 சங்குகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, அருகம்புல் மாலை உள்ளிட்ட பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமி வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதை தொடர்ந்து சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டிய பிறகு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் பல்வேறு சோழச்சர உபசாரங்கள் நடைபெற்ற பின் மகா தீபாரதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் விபூதி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து நமச்சிவாயா, நமச்சிவாயா கோசத்துடன் பிரதோஷ விழாவில் சிறப்பித்தனர். சிறப்பு நிகழ்ச்சியை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயத்தின் ஒன்றான அருள்மிகு ஸ்ரீபாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் 108 சங்கா அபிஷேக பூஜை நடைபெற்ற பிறகு மூலவர் கோடீஸ்வரன் மற்றும் நந்தி பகவான் மற்றும் பாலாம்பிகை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு உட்பட்ட உப்பிடமங்கலம் லிங்கத்தூர் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திலும் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்று மூலவர் காசி விசுவநாதருக்கு சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாரத்தனையும் நடைபெற்றது.
மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை வரும் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா மிகச் சிறப்பாக மாவட்ட முழுவதும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.