கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 102 ஆம் ஆண்டு மாசி மாத திருவிழா கரகம் பாலிக்கும் நிகழ்வுடன் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி உள்ளிட்ட நேர்த்தி கடனை செய்தவாறு முக்கிய வீதியில் வழியாக பக்தர்கள் வலம் வந்த பிறகு ஆலய வாசலில் அமைக்கப்பட்டிருந்த ஆழி(குண்டம்)யில் தங்களது நேர்த்திக்கடனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தொடர்ந்து 12 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் கரூர் அண்ணா காமாட்சி அம்மன் ஆலய மாசி மாத திருவிழா நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கரூர் நகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானமும் மதியம் மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இரவு சாமியே திருவீதி உலா கரகாட்டத்துடன் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.