ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுவது கார்த்திகை மாதம். சிவபெருமான், முருகப்பெருமான் மற்றும் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதமாக இருப்பது கார்த்திகை மாதம் ஆகும். கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் ஆகும். நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் எப்போது? என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement


கார்த்திகை மாத பிறப்பு எப்போது?


நடப்பாண்டு கார்த்திகை மாதம் நாளை மறுநாள் பிறக்கிறது. நவம்பர் 17ம் தேதியான நாளை மறுநாள் கார்த்திகை மாதத்தின் முதல் தேதி பிறக்கிறது. இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால், சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளான சோமவார திங்கள்கிழமையில் இந்த கார்த்திகை மாதம் பிறக்கிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிவார்கள்.




கார்த்திகை தீபம் எப்போது?


நாளை மறுநாள் கார்த்திகை மாதம் பிறக்க உள்ள நிலையில், கார்த்திகை தீபம் டிசம்பர் மாதம் வருகிறது. டிசம்பர் மாதம் 3ம் தேதி இந்த கார்த்திகை தீபம் வருகிறது. ஜோதி வடிவாய் சிவபெருமான் காட்சி தந்ததை கொண்டாடுவதற்காக இந்த கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. 


கார்த்திகை தீபம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது திருவண்ணாமலையே ஆகும். திருவண்ணாமலையில் ஏற்றப்படும் ஜோதியை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவது வழக்கம். 


திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவது வழக்கம். கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் கொடியேற்றம் முதல் மகா தீபம் வரை ஏற்றப்படும் நாட்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரத்தை கீழே காணலாம்.


1. நவம்பர் 24 - திங்கள் - கொடியேற்றம் ( காலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை)


2. நவம்பர் 27 - வியாழன் - வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி கற்பக விருட்சம்


3.நவம்பர் 28 - வெள்ளி - வெள்ளி ரிஷப வாகனம்


4. நவம்பர் 29 - சனி - வெள்ளி ரதம்


5.நவம்பர் 30 - ஞாயிறு - பஞ்சமூர்த்திகள் மகா ரதம் ( காலை 6 மணி முதல் காலை 7.30 மணிக்குள் வடம் பிடித்தல்)


6. டிசம்பர் 03 - புதன் - பரணி தீபம் (காலை 4 மணி), மகா தீபம் ( மாலை 6 மணி)




கார்த்திகை தீபம் திருநாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் காலையில் பரணி தீபமும், மலையில் மாலையில் மகா தீபமும் ஏற்றப்படும். இதைக் காண தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிவது வழக்கம்.  கார்த்திகை தீபத்திற்கான முன்னேற்பாடுகளில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.