கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகர் கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி கிருத்திகை முன்னிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்


ஆடி கிருத்திகை சிறப்பு



கிருத்திகை நட்சத்திரம் என்பது எப்பொழுதும் தமிழ் கடவுள்  முருகருக்கு மிக உகந்த நாளாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திர நாளன்று முருகர் கோவில்களிலும், அவரவர் வீடுகளிலும் முருகப்பெருமாளை இந்து மக்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதேபோன்று தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை மற்றும் ஆடி கிருத்திகை மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 


அந்த வகையில் இன்று  ஆடி மாத கிருத்திகை ஒட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கந்தபுராணம் அரங்கேற்றி திருக்கோவிலான அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. 



காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயில்


கந்தபுராணம் அரங்கேறிய திருக்கோயில் என்பதால் அதிகாலை மதுரை நீண்ட வரிசைப்படுத்துதல் காத்திருந்து சாமி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.‌ மேலும் காஞ்சிபுரம் மட்டுமின்றி, பல்வேறு பொதுமக்கள் பல்வேறு பகுதியில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோவில் நகரமாக உள்ள காஞ்சிபுரம் முருக பக்தர் வெள்ளத்தில் நிறைந்துள்ளது. 


காவடி ஊர்வலம்



இந்நிலையில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து சுமார், 200க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டு காவடி எடுத்தனர்.  திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து,  சின்ன காஞ்சிபுரம், செட்டி தெரு, ரங்கசாமி குளம், காந்தி சாலை, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், தெற்கு ராஜ வீதி எனும் நகரில் முக்கிய நகர வழியாக 10 கிலோமீட்டர் தொலைவில் ஊர்வலமாக நடந்து வந்தனர். 


வழியெங்கும் பம்பை ஒலி ஒலிக்க, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்தி கோஷங்களுடன் ஒலித்தவாறு ஊர்வலமாக காவடி எடுத்து வந்தவர்களை வழியெங்கும் தீபாராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு காவடிகள் எடுத்த வண்ணம் பக்தர்கள் ஊர்வலமாக சென்றதால் நகரில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


முருகனுக்கு காவடி எடுத்தால்


முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து விரதம் இருந்து, வேண்டுதலை நிறைவேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் காவடி எடுத்து வந்தால் அனைத்து வித தடைகளும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.