தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் நிகழ்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் அரூர் பழையபேட்டையில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிய பெருமாள் சுவாமி கோவில் சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.




இதற்காக இரண்டு மணியிலிருந்து திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கரிய பெருமாள் பரமபத சொர்கக வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெருமாள் புறப்பாடு தொடங்கியவுடன், பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசமிட்டவாறு சுற்றி வந்தனர். இதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் சுவாமியை வணங்கி வழிபட்டனர். சொர்கக வாசல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கபட்டது.