சித்திரை முதல் நாள் எப்போதும் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. 2023 ஆம் ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவிருக்கிறது.


அறிவியல் ரீதியாக சூரியன் பூமியை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகிறது. இதை வைத்து தான் தமிழ் வருடத்தின் கால அளவும் பின்பற்றப்படுகிறது. சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடத்தின் தொடக்க ஆண்டு என்றும், மீன ராசியிலிருந்து வெளிவருவதை இறுதி ஆண்டு என வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது.


அன்றைய தினம் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நாம் சொல்லக் கூடிய வாழ்த்துகள், பகிரக்கூடிய புகைப்பட குறுந்தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம்.


தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.


தமிழ் புத்தாண்டு தினமானது உங்கள் வாழ்க்கையில் அத்தனை நன்மையையும் கொண்டுவந்து சேர்க்கட்டும். வாழ்வில் வெற்றிகளை கொடுக்கட்டும். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் அனைவருக்கும் நன்மை சேரட்டும்.


புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு வரும் நிலையில் உங்களுக்கு அது ஆசிர்வாதமும் மகிழ்ச்சியும் புதிய உத்வேகமும் தருவதாக அமையட்டும். நீங்கள் எல்லா தடைகளையும் தகர்த்து வெற்றியுடன் மிளிர்வீர்களாக.


சூரிய ஒளி உங்கள் வாழ்வில் நலமும், வளமும், புகழும் சேர்க்கட்டும். கடவுள் உங்களுக்கு அன்பும், அரவணைப்பும் கிடைக்கச் செய்வாராக. புத்தாண்டு வாழ்த்துகள்.


புது வருடம் என்பது உங்களுடைய புதிய நம்பிக்கைகளுக்கு மெருகேற்றட்டும். இடுதான் புதிய எல்லைகளைத் தொடுவதற்கு சரியான நேரமாகும். 2023 ஐ வரவேற்கத் தயாராகுங்கள். வாழ்த்துகள்.




இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் சேர்க்கட்டும்.


உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துகள். அமைதியும் மகிழ்ச்சியும் என்றும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!




 


இந்த தமிழ் புத்தாண்டில், நீங்கள் முன்னெடுக்கும் எல்லா புதிய காரியங்களும் வெற்றியடைய வாழ்த்துகள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


தமிழ் போல் வளர்க. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!




தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது எப்படி என்று பலர் மறந்துவிட்டனர்.. ஆனால், கடல் கடந்து வாழும் தமிழர்கள் இன்றும் பழைய மரபு படியே தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.


தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது எப்படி?
 
1)முத்தமிழை குறிக்கும் முக்கனிகள் (மா, பலா, வாழை : வாழை எப்போதும் கிடைக்கும், ஆனால், மா, பலா ஆகியவை சித்திரை மாதம் மட்டுமே கிடைக்கும். அதனால் தான் தமிழர்கள் சித்திரையை புத்தாண்டாக கொண்டுள்ளனர்)
2)வெற்றிலை, பாக்கு
3)பூ
4)தேங்காய்
5)பணம் (ரூபாய் நோட்டு/காசு)
6)நகை (தங்கம்/வெள்ளி)
7)விளக்கு தீபம்
8)மஞ்சள்,குங்குமம்
9)கிண்ணத்தில் சிறிது அரிசி,பருப்பு
இந்த ஒன்பது பொருட்களையும் ஒரு கண்ணாடியின் முன் வைத்து , அந்த பிரதிபலிப்பை பார்த்தால் ஆண்டு முழுவதும் வளம் பெருகும் என்பது தமிழரின் தொன்றுதொட்ட நம்பிக்கை.