உலக பிரசித்தி பெற்ற ஆலங்குடி குரு பகவான் கோவிலில் இன்று மாலை 05.19 மணிக்கு குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும் இருந்தும் பக்தர்கள் ஆலங்குடி நோக்கி படையெடுத்து வருகின்றனர். 


ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் குருபகவான்


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக இந்த கோவிலில் நடைபெறும் ஆலங்குடி மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை தரிசிக்க வருவார்கள். அந்த வகையில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. 


மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயரும் குரு


குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார்.  அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்படும். மேலும் பரிகார ராசிகள் ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் தனுசு கும்பம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம். வரும் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ம  ற்றும் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறும்.


 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்


குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தாளான பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்காக கம்புகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.


ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம்


இன்று காலை முதல் சென்னை கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் குற்றச்சபங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர் அது மட்டுமின்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்